Header Ads Widget

``பிரதமர் பதவியே கொடுத்தாலும், என் பிணம் கூட பாஜக, ஆர்.எஸ்.எஸ்-க்கு செல்லாது" - சித்தராமையா காட்டம்

கர்நாடகாவின் ராமநகர் மாவட்டம் மாகடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு பேசினார். அப்போது, "என்னை இந்து விரோதி என்று பா.ஜ.க-வினர் சொல்கிறார்கள். அந்த கட்சியை சேர்ந்த சி.டி.ரவி என்னை சித்ராமுல்லாகான் என்று சொல்கிறார். மகாத்மா காந்தி இந்து அல்லவா? அவரை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவைக் கொண்டாடுபவர்களும் இந்துக்களா? பா.ஜ.க-வுக்கு தான் மரியாதை இல்லை. அவர்களுடன் கூட்டு சேர்ந்து செயல்படும் ஜனதா தளம் கட்சியினருக்காவது மரியாதை இருக்கிறதா? அவர்களுக்கும் மரியாதை கிடையாது.

நான் முதல்வராக இருந்தபோது அன்ன பாக்கிய திட்டத்தை அமல்படுத்தினோம். அனைத்து ஏழைகளுக்கும் இலவச அரிசி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அன்ன பாக்கிய திட்டத்தின் கீழ் 10 கிலோ அரிசி வழங்கப்படும். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 விதம் ஆண்டுக்கு 24 ஆயிரம் வழங்கப்படும். வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். பாலுக்கான ஊக்கத்தொகை உயர்த்துவோம்.

சித்தராமையா

எனக்கு ஜனாதிபதி பதவியோ அல்லது பிரதமர் பதவியோ வழங்கினாலும் கூட நான் பா.ஜ.க-வுக்கு செல்ல மாட்டேன். எனது பிணம் கூட பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ்-க்கு செல்லாது. ஜனதா தளம் கட்சிக்கு கொள்கை கோட்பாடுகள் இல்லை என்பதால் ஆட்சி அதிகாரத்திற்காக பா.ஜ.க-வுடன் அந்தக் கட்சி கைகோர்க்கும். ஆட்சி அதிகாரத்திற்காக அந்த கட்சியினர் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொள்வார்கள்" எனப் பேசியிருக்கிறார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/X3vBtTY
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்