Header Ads Widget

முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்: `ஆதார் கட்டாயம்' என தமிழ்நாடு அரசு உத்தரவு!

தமிழ்நாடு பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் 1992-ம் ஆண்டு தமிழக அரசால் உருவாக்கப்பட்டது.  ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.25,000, இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ரூ.50,000 வழங்கக்கப்படும். இந்தத் தொகை மொத்தமாக, அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும். பெண்களுக்கு  18 வயதை  எட்டிய பின் முதிர்வு தொகையுடன் சேர்த்து இறுதி தொகை வழங்கப்படும். இது  சமூக நலன் துறை சார்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த திட்டத்தில் தொடர ஆதார் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை

சமூக நலத்துறை சார்பாக  வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``மத்திய அரசு கொண்டுவந்த சட்டபிரிவு 7-ன் அடிப்படையில் மாநிலத்தில் உள்ள  முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் வெளிப்படைத்தன்மை கொண்டு வரவும், அரசின் செயல்முறையயை ஒற்றை ஆவணத்தைக் கொண்டு எளிமைப்படுத்தவும்  ஆதார் இணைப்பது அவசியம். எனவே, இதில் ஆதார் இணைக்கத்தவர்கள் உடனே இணைக்க வேண்டும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களை மாவட்ட ஆட்சியர்களுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

அரசு வெளியிட்ட அறிவிப்பு

மத்திய அரசு கொண்டுவந்த ஆதாரைத் தொடர்ந்து தி.மு.க எதிர்த்து வந்தது. ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு மின் இணைப்பு, நலத்திட்டங்கள் பெற என அனைத்துக்கும் ஆதார் கட்டாயம் என அறிவித்தது. அதற்கு மத்திய அரசு நிதி பங்கிட்டு இணைந்து செயல்படுவதால், அவர்கள்  நிர்பந்தத்தின் பெயரில் அறிவித்ததாகக் கூறியது.  தற்போது முற்றிலும் மாநில அரசு நிதி ஒதுக்கும் ஒரு திட்டத்திற்கு ஆதார் கட்டாயம் என அறிவித்திருப்பது மீண்டும் விவாதத்தை கிளப்பி உள்ளது.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்