Doctor Vikatan: சிறுநீரகப் பாதையில் ஆரம்பநிலை கேன்சர் தொற்று இருக்கிறது. இந்தப் பிரச்னைக்கும் நீண்டநாள் சிறுநீரக பாதிப்புக்கும் சித்த மருத்துவத்தில் தீர்வுகள் உண்டா?
-Ezhillmani Shanmugam, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி
நீங்கள் கேட்டுள்ள இரண்டு பிரச்னைகளுக்குமே சித்த மருத்துவத்தில் தீர்வுகள் உண்டு. ஆனால் அந்த விஷயத்தில் நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
தகுதியும் அனுபவமும் வாய்ந்த சித்த மருத்துவரால் மட்டும்தான் இந்தப் பிரச்னைகளுக்கு சரியான தீர்வுகளைச் சொல்ல முடியும். அப்படியில்லாத பட்சத்தில் தவறான மருத்துவரை அணுகி, அவர் தரும் தவறான சிகிச்சைகளைப் பின்பற்றும் பட்சத்தில் உங்களுடைய பாதிப்பு தீவிரமாகி, அடுத்தகட்டத்துக்குப் போய் விடும்.
சித்த மருத்துவத்தில் புற்றுநோயைக் குணப்படுத்த மிகச் சிறந்த மருந்துகள் உள்ளன. ஆனால் புற்றுநோய் எந்த இடத்தில் பாதித்திருக்கிறது என்பதை நாடி பார்த்து, அதற்கேற்பவே மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள். அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவர்களால் மட்டும்தான், சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு அவர் தரும் மருந்துகள் மட்டுமே போதுமா, கூடவே கீமோதெரபி போன்ற துணை சிகிச்சைகள் தேவையா என்பதையும் சரியாக கணித்துச் சொல்ல முடியும்.
எனவே உங்களுடைய கேள்விக்கு மேலோட்டமாக தீர்வு சொல்லிவிட முடியாது. உங்களுடைய ரிப்போர்ட்டுடன் திறமையான சித்த மருத்துவரை அணுகுங்கள். அவர் நாடி பார்த்து, நோயின் தீவிரத்துக்கேற்ப உங்களுக்கான சிகிச்சையைப் பரிந்துரைப்பார்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Latest News

0 கருத்துகள்