Header Ads Widget

ஒரு வீட்டுக்கு ஒரே மின் இணைப்பு எனப் பரவிய தகவல் உண்மையா? - மின் உற்பத்தி பகிர்மான கழகம் விளக்கம்!

ஒரு வளாகத்திற்கு ஒரு மின் இணைப்பு என்ற அடிப்படையில், ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை ஒரே மின் இணைப்பாக இணைக்க வேண்டும் என திருவெறும்பூர் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம், பயனர் ஒருவருக்கு கடிதம் எழுதியிருந்தது. அதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் ஒரே வீட்டில் ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகள் ஒன்றிணைக்கப்படுவதற்காகவே ஆதார் எண் பெறப்பட்டு மின் இணைப்புடன் இணைக்க வலியுறுத்தப்பட்டிருக்கிறது என்ற கருத்து சமூகவலைதளங்களில் வேகமாக பரவிவந்தது.

மின்வாரியம்

இந்த நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் வெளியிட்டிருக்கும் செய்தி அறிக்கையில்," தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் இதுவரை 99 சதவிகிதத்துக்கு மேல் வீடு, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கடந்த சில நாள்களில் சமூக வலைதளங்களில் ஒரே வீட்டில் ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகள் ஒன்றிணைக்கப்படுவதற்காகவே ஆதார் எண் பெறப்பட்டு மின் இணைப்புடன் இணைக்க வலியுறுத்தப்பட்டிருக்கிறது என்ற கருத்து பதியப்பட்டு வருகிறது.

இந்த கருத்து முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்கு புறம்பானது. தமிழ்நாடு அரசு ஒழுங்குமுறை முன்மாதிரி ஆணையம், கடந்த 9.9.2022 அன்று வெளியிட்ட வீதப்பட்டியல் மாற்ற ஆணையின் சரத்துகளின் படி, கள ஆய்வின் அடிப்படையில், ஒரே வீட்டில்/குடியிருப்பில் ஒரே நபரின் பெயரில் ஒரு குடும்பத்தினரே உபயோகிக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டின் மின் இணைப்புகளை ஒன்றிணைக்க அல்லது அத்தகைய கூடுதல் மின் இணைப்புகளை பொது பயன்பாட்டிற்கான மின் இணைப்பாக மாற்ற உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும், சில நிர்வாக காரணங்களால் மேற்படி ஒன்றிணைப்பு வீதப்பட்டியல் மாற்று பணி தொடங்க கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டிருக்கிறது.

மின்வாரியம்

எனவே, இது தொடர்பான எந்த ஒரு செயல் உத்தரவும் மின்பகிர்மான வட்டங்களில் பிரிவு அலுவலகங்களுக்கு பிறப்பிக்கப்படவில்லை. எனினும் குறிப்பிட்ட கள ஆய்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பிரிவு அலுவலரின் கடித வரைவு செயல், ஒரு தனிப்பட்ட நிகழ்வாகும். இதில் சம்பந்தப்பட்ட அலுவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்" எனக் குறிப்பிட்டிருக்கிறது.



from India News https://ift.tt/EvQHwOi
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்