Header Ads Widget

டொனால்டு ட்ரம்ப்: ஆபாச பட நடிகைக்கு பணம் உள்ளிட்ட 34 குற்றச்சாட்டுகள் - கைதுக்குப் பின், விடுவிப்பு!

தொடர்ச்சியாக சர்ச்சைகளில் சிக்கி வரும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் புதிய பிரச்னை ஒன்றில் சிக்கியுள்ளார். ட்ரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள கிரிமினல் வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில், அவர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டதால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டது.‌ இதன் காரணமாக, நியூயார்க் மாகாணம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நடைபெறும் நிலையில், டொனால்ட் ட்ரம்ப் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். கிரிமினல் வழக்கு பதியப்படும் அமெரிக்காவின் முதல் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்ஹாட்டன் கிராண்ட் ஜூரி குழு என்னும் மக்கள் பிரதிநிதி குழு ட்ரம்ப் தொடர்பான குற்றச்சாட்டை செவ்வாய்க்கிழமை அன்று விசாரிக்கும் என்று அறிவிக்கப்படிருந்தது. குற்றம் செய்திருக்க கூடும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நம்பும் பட்சத்தில், சந்தேகப்படும் நபர் மீது எழுத்துப்பூர்வமான குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும். அடிப்படை தகவல்கள் மற்றும் ஆதாரங்களை கொண்டு கிராண்ட் ஜூரி குழு அதனை விசாரிக்கும்.

2016 அதிபர் தேர்தலுக்கு முன்பு, `ட்ரம்ப் தன்னுடன் ரகசிய உறவில் இருந்தார்’ என்று அமெரிக்காவின் பிரபல ஆபாச நடிகை ஸ்ட்ராமி டேனியல்ஸ் கூறியிருந்தார். அதனை மறைக்க தனக்கு, அவரின் வழக்கறிஞர் மூலமாக 1,30,000 அமெரிக்க டாலர்கள் லஞ்சமாக கொடுத்தார் என்று ஸ்ட்ராமி டேனியல்ஸ் கூறியிருந்தார். ஆனால், ட்ரம்பின் தேர்தல் ஆவணங்கள் படி குறிப்பிட்ட தொகை வழக்கறிஞருக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டதாக உள்ளது. சட்டவிரோதமாக கணக்கில் வராத 1,30,000 அமெரிக்க டாலர், நடிகைக்கு வழங்கப்பட்டதா என்பது தொடர்பான விசாரணைக்கு தான் ஆஜரானார் ட்ரம்ப் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ட்ரம்பின் ஃப்ளோரிடா வீட்டில் சிக்கிய ரகசிய ஆவணங்கள் குறித்தும் விசாரணையில் கேள்விகள் எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் ஜனவரி 6, ‌2021ம் ஆண்டு ட்ரம்பின் உரைக்குப் பின்பு வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கலவரம் தொடர்பான குற்றச்சாட்டுகளுடன்‌ சேர்த்து 30க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் ட்ரம்பின் மீது வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஃப்ளோரிடா வில் இருந்து கிளம்பிய டொனால்ட் ட்ரம்ப், லாகார்டியா விமான நிலையத்திற்கு ( La Guardia airport ) வந்தடைந்தார். அங்கிருந்து, தனக்கு சொந்தமான ட்ரம்ப் டவர்ஸ்க்கு சென்று ஓய்வெடுத்தார். அதன்பின், தனது கான்வாயுடன், பலத்த போலீஸ் பாதுகாப்போடு மன்ஹேட்டன் நீதிமன்றத்திற்கு வந்தடைந்தார். நீதிமன்றத்திற்கு வெளியில் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் குவிந்து, ட்ரம்பிற்கு ஆதரவாக முழக்கமிட்டனர். அடுத்து வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பாக டொனால்ட் ட்ரம்ப் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நீதிமன்றத்தில் ஆஜரான ட்ரம்பிடம் விசாரணை நடைபெற்றது. அப்போது விசாரணையில் குற்றப்பத்திரிகையில் அவர் மீது உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து வாசித்து காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் கைரேகை பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். எனினும் அவர் வகித்த உயர் பதவி காரணமாக விலங்கு எதுவும் மாட்டப்படவில்லை.விசாரணையில் தனது மீதான 34 குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்தார் ட்ரம்ப்.

முன்னாள் அதிபர் ட்ரம்புக்கு எதிராக 34 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட விசாரணையில், நியூயார்க் நீதிபதி டொனால்ட் ட்ரம்பை எந்தவித முன்-விசாரணை கட்டுப்பாடுகளும் இல்லாமல் காவலில் இருந்து விடுவித்தார். நீதிபதி, ஜுவான் மெர்ச்சன், ஒரு மணிநேர விசாரணையின் போது, ஜனவரி 2024 -ல் இருந்து இந்த விசாரணை தொடங்கலாம் என்று கூறினார். இதனை தொடர்ந்த் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறிய ட்ரம்ப் மீண்டும் ஃப்ளோரிடா புறப்பட்டார்.



from India News https://ift.tt/ZpKiyFJ
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்