விஜய் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகும் `கனா காணும் காலங்கள்' சீசன் 2-வில் மதன் கதாபாத்திரத்தில் நடிப்பவர் நரேஷ். அந்தத் தொடரின் கதைப்படி சிறகுகள் பள்ளிக்கு புதுவரவு. ரெண்டாவது சீசனின் என்ட்ரியான இவருக்கு மாதவி என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறது.
நரேஷூம், மாதவியும் பல ஆண்டுகள் காதலித்து வந்துள்ளனர். இருவரும் தொடர்ந்து அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ரீல்ஸ்கள் பதிவிட்டு வந்தனர். ஏற்கனவே இருவரும் காதலிப்பதை வெளிப்படையாகவே அறிவித்திருந்ததால் பலரும் `எப்போ கல்யாணம்?' எனத் தொடர்ந்து கேட்டு வந்த நிலையில் தற்போது அதற்கு பதில் அளிக்கும் விதமாக இருவரும் நிச்சயதார்த்த புகைப்படங்களை பதிவிட்டிருக்கின்றனர். அந்தப் புகைப்படங்கள் சமூகவலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றன.
சமீபத்தில், `கனா காணும் காலங்கள்' வெப் சீரிஸில் நண்பர்களான அபி - கெளதம் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த தீபிகாவும், ராஜா வெற்றி பிரபுவும் திருமணம் செய்து கொண்டனர். அந்த செட்டில் அடுத்தக் கல்யாணம் நரேஷின் கல்யாணம் என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் இட்டு வருகிறார்கள்.
`கனா காணும் காலங்கள்' டீம் அவர்களுடைய நிச்சயதார்த்தத்திற்கு சென்றிருக்கிறார்கள். அந்தப் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.
வாழ்த்துகள் நரேஷ் - மாதவி!
from Latest news

0 கருத்துகள்