ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த சிவகிரியைச் சேர்ந்தவர் கெளதம். இவர் அ.தி.மு.க-வின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் நிர்வாகியாக இருந்து வருகிறார். சமூக வலைதளங்களில் பல்வேறு புகைப்படங்கள், வீடியோக்கள், கருத்துகளை பதிவிட்டும் வருகிறார்.
இந்நிலையில் கௌதம் அண்மையில் தனது இன்ஸ்டாகிராமில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறு வீடியோவை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக திமுகவினர் அளித்த புகாரின்பேரில், சிவகிரி போலீஸார், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, கெளதமை போலீஸார் வெள்ளிக்கிழமை அழைத்து விசாரணை நடத்தினர். இதையறிந்த அ.தி.மு.க.வினர் ஈரோடு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் குவிந்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் 6 மணி நேர விசாரணைக்குப் பிறகு கௌதம் மீது 5 சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் அவரை கைது செய்தனர்.
from India News https://ift.tt/1pxqXBO
via IFTTT

0 கருத்துகள்