Header Ads Widget

டரகட ஸடலன... அதமக-வ... மதலவரகக பதல என அதமக-வ சடனர அணணமல?!

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறையின் நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பா.ஜ.க-வை விமர்சித்து, எச்சரித்து வீடியோ வெளியிட்டார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கும் அறிக்கை, கடந்த கால அதிமுக ஆட்சியில் நடைபெற்ற விவகாரங்கள் குறித்து நினைவூட்டும் விதமாக அமைந்திருக்கிறது.

செந்தில் பாலாஜி

அதாவது, 2016-ல் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தலில்களில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது குறித்து அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் சிபிஐ விசாரணை கோரி இருந்தார். அதை குறிப்பிட்டு அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை அ.தி.மு.க-வினரை சீண்டியிருக்கிறது. குட்கா விற்பனை, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம், சாத்தான்குளம் லாக்கப் மரணங்கள் உள்ளிட்டவை அண்ணாமலை குறிப்பிட்டு இருக்கிறார். முன்னதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அண்ணாமலையின் விமர்சனம், அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானம் போடும் அளவுக்கு அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியையே பதம் பார்த்தது.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து முதல்வரின் கண்டனத்துக்கு பதிலளிக்கும் விதமாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், ஒருசில விவகாரங்களை முறைகேடுகள் என்றே அண்ணாமலை குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டு இருப்பதுதான் தற்போது சர்ச்சைக்கு காரணமாக அமைந்திருக்கிறது.

அண்ணாமலை

இதுதொடர்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் பேசினோம். பா.ஜ.க குறித்து எங்கள் தலைமை பேசவேண்டாம் என்று அறிவுறுத்தி இருப்பதால், பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் சில கருத்துகளை முன்வைத்தார்.

``செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறைதான் தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. அதைதான் ஸ்டாலின் விமர்சனம் செய்து இருக்கிறார். அதற்கு தேவையில்லாமல், அ.தி.மு.க-வை வம்புக்கு இழுத்து இருக்கிறார் அண்ணாமலை.

ஜூன் 16-ம் தேதி அவர் வெளியிட்ட அறிக்கை முழுவதும் அ.தி.மு.க-வை மையமிட்டே இருக்கிறது. 2019-ம் ஆண்டு ஆர்.கே.நகர் தேர்தல் முறைகேடுகள் என குறிப்பிட்டு இருக்கிறார் அண்ணாமலை. அதேபோல, 2020-ல் பிரதமரின் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்குவதில் தமிழ்நாட்டில் நடந்த முறைகேடு, 2018-ல் குரூப் 1 தேர்வு முறைகேடு, 2018-ல் மின்சார வாரியம் நிலக்கரி இறக்குமதி முறைகேடு, 2018-ல் ஸ்மார்ட் சிட்டி திட்ட ஏலம் என எந்த ஒரு ஆதரமும் இல்லாமல், தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியதை அப்படியே அண்ணாமலையும் வாசித்து இருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி

ஸ்டாலினை விமர்சிக்கவேண்டும் என்பது மட்டும் அண்ணாமலையும் நோக்கமாக இருந்தால், ஆதாரம் இல்லாமல் முறைகேடு என அ.தி.மு.க-வை பேசி இருக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால், கடந்த கால அ.தி.மு.க ஆட்சியை களங்கப்படுத்த வேண்டுமென்றே தேவையில்லாமல் பேசி இருக்கிறார். ஏற்கனவே அம்மா குறித்து அண்ணாமலை பேசியதற்கு தொண்டர்கள் கொதித்துக் கொண்டிருக்கும் நிலையில், இதுபோன்ற ஓர் அறிக்கையை தவிர்த்து இருக்கவேண்டும். அல்லது முறைகேடு என்று குறிப்பிடாமல், புகாரென குறிப்பிட்டு தெளிவாக அறிக்கையை வெளியிட்டு இருக்கவேண்டும். அதிமுகவை சீண்டுவதை அண்ணாமலை இத்தோடு நிறுத்தவேண்டும்" என்றார் காட்டமாக...

இதுதொடர்பாக பத்திரிக்கையாளர் எஸ்.பி.லட்சுமணனிடம் பேசினோம். ``அ.தி.மு.க-வுடன் கூட்டணி தொடர்ந்தால், பதவியை ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை பேசியதாக வெளியான விவகாரம் முதல் இதுவரையிலும் அவர் தெளிவுப்படுத்த வேண்டும். பூட்டிய அறைக்குள் நிர்வாகிகள் மத்தியில் அண்ணாமலை பேசிய இந்த கருத்தை, வெளியே அவர் மறுக்கவில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அமித் ஷா தலைமையில் எடப்பாடி தரப்புக்கும் அண்ணாமலைக்கு இடையே நடைபெற்ற சமாதன கூட்டம் நிறைவடைந்த பின்னர், கூட்டணி தொடரும் என அறிவிக்கபட்டது. ஆனால், அரசியல் கருத்துகள் எல்லாம் தண்ணீரில் எழுதப்பட்டதுபோல, அண்ணாமலையின் கருத்து இருந்தது. அ.தி.மு.க-வுடன் உடன்பட்டு செல்லுவதில் அண்ணாமலைக்கு உடன்பாடு இல்லை என்பதே இதிலிருந்து தெரிகிறது.

எஸ்.பி.லட்சுமணன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறக்கும்போது, அவர் குற்றவாளி இல்லை. அதேநேரத்தில், ஊழல் வழக்கில் ஜெயலலிதா, கருணாநிதியால் பழிவாங்கப்பட்டதாகதான் அ.தி.மு.க-வினர் எண்ணுகிறார்கள். அப்படியிருக்கும்போது, அதிமுகவின் கூட்டணி வைக்கும் பாஜக, ஜெயலலிதா தொடர்பான வழக்கில் மெளனமாக இருக்கவேண்டும் அல்லது கருத்து தெரிவிக்ககூடாது என்று தான் எதிர்பார்பார்கள். ஆனால், அண்ணாமலை அ.தி.மு.க-வை சீண்டும் விதமாகவே பேசி வருகிறார். தற்போதும் அவர் வெளியிட்ட அறிக்கையில், அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் நடைபெற்றவைகள் முறைகேடுகள் என்றே குறிப்பிட்டு இருப்பது, அதன் தொடர்ச்சிதான். இதேநிலை தொடர்ந்தால், தேர்தலில் பா.ஜ.க அ.தி.மு.க கூட்டணி எந்த பலனையும் தராது.” என்றார்.



from India News https://ift.tt/kOKxYvE
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்