வத்திராயிருப்பு அருகே அர்ச்சுனாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 25 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் வத்திராயிருப்பு நொண்டியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கருப்பசாமி(வயது 55) என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கோடை விடுமுறைக்கு பின் கடந்த புதன்கிழமை தொடக்க பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வழக்கம்போல் வகுப்புகளுக்கு சென்று வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் 4-ம் வகுப்பு படிக்கும் 9 வயது மாணவி ஒருவர், தண்ணீர் குடிப்பதற்காக தலைமை ஆசிரியர் அறைக்கு அருகே சென்றுள்ளார்.
அப்போது அறையில் இருந்த தலைமை ஆசிரியர் கருப்பசாமி, பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து இதை யாரிடமும் வெளியே சொல்லக்கூடாது என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மாலை வீட்டிற்கு சென்ற மாணவி, பள்ளியில் நடந்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தாய் வத்திராயிருப்பு போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, தலைமை ஆசிரியர் கருப்பசாமியை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
from Latest news

0 கருத்துகள்