"அடுத்தமுறை இந்திய பிரதமராக மோடியை மக்கள் தேர்ந்தெடுத்தால், அனைவரும் சந்திர மண்டலத்தில்தான் குடியேற வேண்டும், இந்தியாவில் வாழ முடியாது" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-07/17ea16a3-b34a-413b-adba-8200c1df66c8/IMG_20230726_WA0008.jpg)
நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மதுரை அருகே தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சீமான், நிர்வாகிகளுடன் தொகுதிவாரியாக ஆலோசனை நடத்தினார். இதில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
அதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசியவர், "கடலூரில் விவசாய நிலங்களை அழித்து என்.எல்.சி நிலம் கையகப்படுத்துகிறது. விவசாயிகளை மாநில அரசும், மத்திய அரசும் வஞ்சிக்கின்றன. விவசாய நிலங்களை அழித்து விமான நிலையம் அமைக்கிறார்கள், சுரங்கம் அமைக்கிறார்கள். விவசாய நிலங்களை அழிப்பதை ஏற்க முடியாது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-03/cad8f632-c4a9-45bb-9957-7909da49ad6d/6401914aa573a.jpg)
அரசியல் லாபத்துக்காக அண்ணாமலை பேசுகிறார், ஆளுநரைச் சந்திக்கிறார், தி.மு.க-வினரின் ஊழல் பட்டியல் வெளியிடும் அண்ணாமலை, அ.தி.மு.க-வினர் செய்த ஊழல் பட்டியலை ஏன் வெளியிடவில்லை... அ.தி.மு.க-வினர் என்ன புனிதர்களா... கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு பற்றியும் வாய் திறக்கவில்லை.
மணிப்பூர் கலவரம் பற்றி தி.மு.க-வினர் பேசுகிறார்கள். குஜராத் கலவரத்தை நியாயப்படுத்தி அப்போதைய கருணாநிதி தலைமையிலான தி.மு.க-வினர் பேசினர். இப்போது எதிராகப் பேசுகின்றனர்.
தமிழகத்தில் நூலகம், பல்நோக்கு மருத்துமனை உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களுக்கு கருணாநிதி பெயர் வைக்கிறார் ஸ்டாலின். டாஸ்மாக் கடைக்கு ஏன் கருணாநிதி பெயர் வைக்கவில்லை...
காங்கிரஸ்-தி.மு.க கூட்டணியும், அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியும் ஓட்டு அரசியலுக்காகத்தான். தமிழகத்திற்கு பல திட்டங்களைத் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். நடைப்பயணம் மேற்கொள்ளும் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி, பயிற்சியின்போது நடைபயிற்சி செய்திருப்பார். அல்லது உடலை ஃபிட் ஆக்க நினைத்து நடைபயிற்சி மேற்கொள்ள உள்ளார் அண்ணாமலை. இதன் மூலமெல்லாம் தமிழகத்தில் தாமரை மலராது.
தேர்தலுக்காக 70 ஆயிரம் பணி நியமன ஆணை என்ன... இன்னும் ஏகப்பட்ட வாக்குறுதிகளை எல்லாம் மோடி தருவார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-07/5ac3b23e-5cf9-47cd-b9fd-c8bfe79b73b1/IMG_20230728_001927.jpg)
சந்திரயான் பற்றி மோடி பாராட்டிப் பேசி வருகிறார். அங்கே குடியேற்ற நினைத்தால் பிரதமர் மோடி முதலில் யாரை அனுமதிப்பார் இந்துக்களையா... முஸ்லிம்களையா... கிறிஸ்தவர்களையா என்பதை நாட்டு மக்களுக்குக் கூற வேண்டும்.
காங்கிரஸ், பா.ஜ.க ஆட்சியில் தமிழகத்திற்கு என்ன செய்தனர்... மக்களை ஏமாற்றி தமிழகத்தை தனியார்களுக்கு தாரை வார்த்து வஞ்சிக்கின்றனர்.
அடுத்த பிரதமராக மோடி வந்தால், இந்தியாவை அழித்து விடுவார். அனைவரும் சந்திர மண்டலத்தில்தான் குடியேற வேண்டும்" என்றார்.
from India News https://ift.tt/LFnUA62
via IFTTT
0 கருத்துகள்