Header Ads Widget

``சீமானும் பாஜக-வும் ஒன்றுதான் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை!” - வேல்முருகன் ஓப்பன் டாக்

``என்.எல்.சி விவகாரத்தில் கையகப்படுத்தப்படுத்தப் பட்ட நிலங்களுக்கு ஏற்கனவே உரிய இழப்பீடு வழங்கப் பட்டதாக நீதிமன்றமே சொல்லியிருக்கிறதே..!”

``நீதிமன்றத்தின் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். ஏக்கருக்கு 6 லட்ச ரூபாய் என 2006 கால கட்டத்திலேயே நிலத்தை என்.எல்.சி-க்கு விவசாயிகள் கொடுத்துவிட்டனர். இருப்பினும் நிலம் விவசாயிகள் வசமிருந்தது. 6 லட்சம் போதாதெனத் தொடர்ச்சியாக நாங்கள் முன்னெடுத்த போராட்டத்தாலும் தமிழ்நாடு அரசோடு தொடர்ச்சியாக நாங்கள் முறையிட்டதன் விளைவாகவும் கூடுதலாக 10 லட்ச ரூபாய் தரவும் என்.எல்.சி நிர்வாகம் ஒப்புதல் கொடுத்துவிட்டது. அதேசமயம் நிரந்தர வேலை தராமல் நிலத்தைத் தர மாட்டோம் என்ற முடிவில் உறுதியாக இருந்தோம். இந்நிலையில் அறுவடைக்குத் தயாரான விளை நிலத்தை 7000 போலீஸாரை குவித்து நிலத்தை கையகப்படுத்திவிட்டார்கள். இது மிகப் பெரிய தவறு.”

என்எல்சி

``இப்படியொரு மிகப்பெரிய தவறைத் தமிழ்நாடு அரசு முந்தியடித்துக் கொண்டு செய்ய வேண்டிய காரணமென்ன?”

``என்.எல்.சி மூலமாக ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தரப்பட்டிருக்கிறது. எனக்குத் தெரிந்த தகவலின்படி பிரதமர் அலுவலகத்திலிருந்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர், தொழில்துறை செயலாளர் ஆகியோருக்கு கடினமாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதனாலேயே இப்படியான காரியத்தை செய்திருக்கிறார்கள்.”

``I.N.D.I.A கூட்டணி பற்றி உங்கள் கருத்தென்ன?”

``மனிதக் குல விரோதியாக இருந்து, மதத்தின் பெயரால் மக்களை ஒன்றுசேரவிடாமல் தடுத்து அரசியல் லாபத்தை மட்டுமே குறியாகக் கொண்டிருக்கும் பா.ஜ.க-வை வீழ்த்துவதற்கு  I.N.D.I.A   என்ற கூட்டணி அமைக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன்.”

எதிர்க்கட்சிகளின் கூட்டணி

``ஆனால், I.N.D.I.A கூட்டணியின் ஆலோசனைக் கூட்டங்களில் உங்களைப் பார்க்க முடிவதில்லையே!”

``நாங்கள் I.N.D.I.A கூட்டணியில் இல்லை. அவர்களும் என்னை அழைக்கவில்லை. ஏனெனில் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு நாங்கள் பிரசாரம் செய்யவில்லை”.

வேல்முருகன்

``இனியும் காங்கிரஸுக்கு பிரசாரம் செய்யமாட்டீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?”

``ஆனால் தற்போதைய சூழல் கடுமையாக மாறிக் கொண்டிருக்கிறது. பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ராணுவ ஆட்சியைப் போல் மோடி ஆட்சி செய்வார். ஆகவே மோடியை வீழ்த்துகிற அணிக்கு தார்மீக ஆதரவை  தர நாங்கள் தயாராக இருக்கிறோம்.”

``சாத்தானின் பிள்ளைகள் என இஸ்லாமிய கிறிஸ்துவர்களை சீமான் பேசியதை நீங்கள் கண்டித்ததாகத் தெரியவில்லையே!”

``உங்களுக்காக இவ்வளவு போராடுகிறோம். ஆனால் நீங்கள் வாக்களிப்பதில்லையே என்ற ஆதங்கத்தில்தான் உணர்ச்சி வயப்பட்டு சாத்தானின் பிள்ளைகள் எனப் பேசிவிட்டார் சீமான். இருந்தாலும் அவர் அப்படி பேசியிருக்கக் கூடாது  நாட்டின் வளர்ச்சிக்கு இஸ்லாமிய, கிறிஸ்துவர்கள் பெரும் பங்காற்றியுள்ளார் என்பதை மறுக்க முடியாது.” 

சீமான்

``சீமானும் பா.ஜ.க-வும் ஒன்றுதான் என்ற விமர்சனத்தை நீங்களும் ஏற்பீர்களா?”

``இது அரசியலுக்காகச் சொல்லப்படுகின்ற கருத்தே தவிர, சீமானும் பா.ஜ.க-வும் ஒன்றுதான் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. பல நேரங்களில் பா.ஜ.கவை போராட்ட களத்திலும் மக்கள் மன்றத்திலும் கடுமையாக விமர்சனம் செய்து பேசிவருகிறவர் சீமான்.”

வேல்முருகன்

``நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி போட்டியிட வேண்டுமென விரும்புகிறீர்களா?”

``கண்டிப்பாக விருப்புகிறேன். கட்சிக்கு இரண்டு, மூன்று எம்.பிக்கள் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்காதா என்ன... ஆனால் 2024 தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி போட்டியிடுவது குறித்து தி.மு.க தான் முடிவு செய்ய வேண்டும்.”



from India News https://ift.tt/pQNFwKz
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்