Header Ads Widget

Tamil News Today Live: சென்னையில் இடி, மின்னலுடன் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை..!

சென்னை: இடி, மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை..!

மழை

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் வரும் 19-ம் தேதி வரையில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்