Header Ads Widget

2 நிர்வாண மாடல்களுக்கு இடையில் என்ட்ரி... திடுக்கிட வைக்கும் கண்காட்சி: எங்கு தெரியுமா?!

லண்டனில் நடைபெற உள்ள ராயல் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் கண்காட்சியைப் பார்வையாளர்கள் காண உள்ளே செல்ல வேண்டுமென்றால், ஆண்- பெண் என நிர்வாணமாக வழியை மறைத்து நிற்கும் இரண்டு மாடல்களுக்கு இடையில் நுழைந்து செல்ல வேண்டும்.

லண்டனில் ராயல் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் கண்காட்சி வரும் 2023 செப்டம்பர் 23-ம் தேதி முதல், 2024 ஜனவரி 1 வரை நடைபெற இருக்கிறது. மெரினா அப்ரரமோவிக் கலைஞரின் 50 ஆண்டுக் கால வாழ்க்கையின் தருணங்கள் பலவும் சிற்பம், வீடியோ, பெர்ஃபார்மன்ஸ் மூலம் வழங்கப்பட உள்ளன. 

Marina Abramović

மெரினா அப்ரரமோவிக் ஒரு செர்பிய கலைஞர். இவரின் வேலைப்பாடுகள் பலவும் பெரும்பாலும் மனித உடல்களை மையப்படுத்தி இருக்கும். 

இந்தக் கண்காட்சியில் ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் என இரண்டு நிர்வாண மாடல்கள் உள்ளே நுழைவதைத் தடுக்கும் வகையில் நிற்கிறார்கள். அவர்களுக்கு இடையில் புகுந்தே பார்வையாளர்கள் உள்ளே வர முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாண கலைஞர்கள் வழியாக நடக்க வசதியாக இல்லாதவர்களுக்கு, தனி நுழைவாயிலும் இருக்கிறது. பார்வையாளர்கள் அதன் வழியாகவும் உள்ளே செல்லலாம்.

இருப்பினும், இந்தக் கண்காட்சி விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. இந்தக் கண்காட்சியின் என்ட்ரி பலரையும் திடுக்கிட வைத்திருக்கிறது. 

Entry (representational Image)

``Imponderabilia என்று அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சி நிர்வாணம் மற்றும் பாலினம், பாலியல் மற்றும் ஆசை ஆகியவற்றுக்கு இடையேயான மோதலை கட்டாயப்படுத்தும் வகையில் இருக்கிறது" என ராயல் அகாடமியின் கண்காட்சிகளின் தலைவரான ஆண்ட்ரியா டார்சியா ஊடகங்களுக்குத் தெரிவித்து இருக்கிறார். 

இந்தக் கண்காட்சியின் என்ட்ரி குறித்து உங்களின் கருத்தென்ன?!



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்