Header Ads Widget

மும்பை: அம்பானி வீட்டு விநாயகர் ஊர்வலம் - காதலனுடன் சேர்ந்து ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடனம்!

தொழிலதிபர் முகேஷ் அம்பானி இந்த ஆண்டு தனது மும்பை வீட்டில் விநாயகர் சிலையைப் பிரதிஷ்டை செய்திருந்தார். விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்ட அன்று பாலிவுட் பிரபலங்கள் சல்மான் கான், ஷாருக்கான் உட்பட அனைவரும் அம்பானி வீட்டில் ஆஜராகி விநாயகரைத் தரிசித்தனர். இதே போன்று விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச்சென்று கடலில் கரைக்கச் சென்ற போது அம்பானி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான பாலிவுட் பிரபலங்கள், அம்பானி குடும்பத்தினர் கலந்துகொண்டனர். ஊர்வலத்திற்கு அம்பானியின் சொந்தப் பாதுகாவலர்கள் பாதுகாப்பு கொடுத்திருந்தனர். விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கலந்துகொண்டதோடு நடனமாடியபடி சென்றார்.

ஜான்வி கபூர்

அவருடன் அவரது காதலன் என்று சொல்லப்படும் சிகர் பஹாரியாவும் இந்தச் சிலை கரைப்பு ஊர்வலத்தில் ஜான்வி கபூருடன் கலந்துகொண்டார். சிகர் பஹாரியா மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சுஷில் குமார் ஷிண்டேயின் பேரன் ஆவார். அதோடு சிகர் பஹாரியாவும், ஜான்வியும் மும்பையில் ஒரே கட்டடத்தில் வசிக்கின்றனர். இதனால் இருவரும் நீண்ட காலமாக நண்பர்களாக இருந்து வருகின்றனர். கடந்த மாதம் இரண்டு பேரும் சேர்ந்து திருப்பதி ஏழுமலையானைத் தரிசனம் செய்துவிட்டு வந்தனர்.

முகேஷ் அம்பானி - நீதா அம்பானி

முகேஷ் அம்பானி நேற்று இரவு, தனது குடும்பத்தினருடன் சென்று மும்பையில் மிகவும் பிரபலமான லால்பாக் ராஜா கணபதியைத் தரிசனம் செய்தார். கணபதி மண்டல் நிர்வாகிகள் அம்பானிக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தனர். அவர் தனது தாயார் மற்றும் மனைவி நீதாவின் தாயார் பூர்ணிமா, தன் இரண்டு மகன்கள், மகள் ஆகியோருடன் தரிசனத்திற்காகச் சென்றிருந்தார்.



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்