Header Ads Widget

Leo: `லியோ’ ட்ரெய்லர் எப்படி? - என்ன சொல்கிறார் வானதி சீனிவாசன்?

நடிகர் விஜய் நடித்திருக்கும் `லியோ’ படம் வருகிற 19-ம் தேதி வெளியாகவிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைத்திருக்கிறார். மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியானது.

லியோ

இது குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்துவருகின்றன. ஒருபக்கம் விஜய் ரசிகர்கள் கொண்டாடினாலும், மறுபக்கம் சிகரெட் பிடிக்கும் காட்சி... கெட்ட வார்த்தை பேசுவது போன்றவற்றுக்கு எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது.

இந்த நிலையில், பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன், தன் வீட்டில் `லியோ’ ட்ரெய்லரைப் பார்க்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார்.

லியோ ட்ரெய்லர் பார்க்கும் வானதி சீனிவாசன்

இது குறித்து, “அ.தி.மு.க கூட்டணி முறிந்துவிட்டதால், பா.ஜ.க விஜய்யின் ஆதரவைப் பெற முயல்கிறது” உள்ளிட்ட கருத்துகளை, சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகின்றனர்.

இது குறித்து வானதி சீனிவாசனிடம் கேட்டபோது, ``நான் மிகவும் அரிதாகத்தான் டி.வி பார்ப்பேன். நேற்று வீட்டில் இருந்தபோது `லியோ’ ட்ரெய்லர் நன்றாக இருக்கிறது என்று தம்பிகள் கூறினார்கள். அதனால் பார்த்தேன். காட்சிப்படுத்துதல் உள்ளிட்டவை நன்றாக இருந்தன. அதனால் பதிவிட்டேன். மற்றபடி இதில் எந்த உள்நோக்கமோ, அரசியலோ இல்லை. நல்ல சினிமா, பாடல்களை ரசிப்பேன்.

லியோ

விஜய் உள்ளிட்ட எந்த நடிகராக இருந்தாலும் நல்ல படங்களைப் பார்ப்பேன்” என்றார். `லியோ’ ட்ரெய்லர்-மீதான விமர்சனங்கள்' குறித்த கேள்விக்கு, “விமர்சனங்கள் வரத்தான் செய்யும். அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை. படத்தின் விமர்சனங்கள், அப்போதுள்ள நேரத்தைப் பொறுத்து `லியோ’ படத்துக்குச் செல்வது குறித்து முடிவுசெய்வேன்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்