முகூர்த்த நாள் நெருங்குது…சங்கீத் ஃபங்க்ஷன், பரிசத் திருவிழா, நலங்கு, முகூர்த்தம், ரிசப்ஷன், தாம்பூலம், இப்படி எல்லா ஃபங்க்ஷனுக்கும் சேலைகள் எடுத்தாச்சு…ஆனா அதுக்கான நகைகளும், ஆக்ஸசரீசும் எடுத்துட்டீங்களா?
சேலைகளுக்கு ஏற்ற நகைகளும், மேட்ச்சிங்கான ஆக்ஸசரீசும் எடுப்பதில் தான் ஒரு மணப்பெண்ணின் மொத்த தோற்றமும் அடங்கி இருக்கிறது.
மணப்பெண்கள் முகூர்த்தம் மற்றும் ரிசப்ஷனில் கட்டப்போகும் சேலைகளுக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை, அதனுடன் அணியப்போகும் நகைகள் மற்றும் ஆக்ஸசரீகளுக்கும் அவசியம் கொடுக்கவேண்டும்.
நகை வாங்குவோருக்கான டிப்ஸ்:
கண்ணைப் பறிக்கும் நகைகள் ஆயிரம் இருந்தாலும், அவை உங்களின் உடலை உறுத்தாமல் இருக்குமா என்று யோசிக்க வேண்டியது அவசியம்.
வழக்கமாக, நம் வீட்டில் நெக்லஸ் எடுப்பதிலிருந்து ஆரம்பிப்போம் அல்லவா… அப்போது, உங்களின் ஜாக்கெட் மற்றும் புடவையின் கழுத்துப் பகுதியை மனதில் வைத்து நகைகளை வாங்குங்கள். புடவையின் கலர், புடவை ஜரியின் கலர், புடவை பார்டரின் கலர் மற்றும் அதன் நீளம் என அனைத்தையும் கருத்தில் கொள்ளவேண்டியது அவசியம்.
ஹாப்ஃ வொயிட், சந்தனம், மஞ்சள், இளஞ்சிவப்பு, கிளிப் பச்சை போன்ற லைட் கலர் புடவைகளுக்கு வைடூரியம், பவளம், மரகதம் என ரத்தினங்கள் பதித்த நகைகள் எடுப்பாக இருக்கும்.
கருநீலம், ஊதா, மஜெந்தா, மெரூன் என டார்க் கலர் புடவைகளுக்கு கோல்டு பிளேட்டடு, ரோஸ் கோல்டு, பிளாட்டினம், வைர நகைகள் பொருந்தும். காரணம், புடவைக்கு நேரெதிரான கலர்களில் நகைகள் அணியும்போது, அவை நகை மற்றும் புடவையின் தன்மையை மேலும் மெருகேற்றும்.
முத்து மாலையோ, ரத்தினம் பதித்த மாலையோ, சரோஜா தேவி காலத்து சோக்கர் வகை நகைகளோ அல்லது வேலைப்பாடுகள் அதிகமிருக்கும் டிசைனர் நகைகளோ, எதுவாக இருந்தாலும், உங்களது முக அமைப்பிற்கும், வசதிக்கும் ஏற்ப இருக்க வேண்டும்.
அத்துடன், நெக்லஸுக்குத் தகுந்தாற்போல் காதணியை வாங்கவேண்டியது அவசியம். நலங்கு, முகூர்த்தம் போன்ற நிறைய சடங்குகள் இருக்கும் தருணங்களில் ஜிமிக்கி ஏற்றதாக இருக்கும். ரிசப்ஷனிற்கு நீண்ட கவுன் அல்லது லெஹெங்கா அணிவது தான் தற்போதைய டிரெண்ட். அப்படி இருக்க, அதற்கு பெண்டென்ட் பதித்த காதணிகள், இயர்ட்ரோப் காதணிகள் நன்றாக இருக்கும்.
வளையல்கள் என வரும்போது, குந்தன், கடா, கிரிஸ்டல் ரக வளையல்கள் எந்த கொண்டாட்டத்துக்கும் உகந்ததாக இருக்கும்.
உங்களின் காலணிகள் எப்படி இருக்க வேண்டும்?
முகூர்த்த நேரத்தில் காலணிகள் தேவைப்படாது என்றாலும், ரிசப்ஷன் நேரத்தில் உற்றார் உறவினர்களோடு ஃபோட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காக, நீண்ட நேரம் நிற்க வேண்டி வரும். அந்த நேரத்தில் ஹீல்ஸ் இருக்கும் செருப்புகளைத் தவிர்ப்பது அவசியம். அதற்கு பதிலாக ஃபிளாட்ஸ் மற்றும் குஷன் இருக்கும் டிசைனர் செருப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம். உங்களுடைய வசதியைப் பொறுத்து உயர் ரக டிசைன்களோடு கட் ஷூ, சாண்டல்ஸ், வெட்ஜெஸ், மற்றும் ஸ்ட்ராப் உள்ள காலனி வகைகளைத் தேர்ந்தெடுத்து அணிந்து கொள்ளலாம்.
மணி பர்ஸ் மற்றும் ஹேண்ட் பேக்ஸ்:
அடிக்கடி உங்களுக்கு லிப்ஸ்டிக், காம்பாக்ட், ஃபவுண்டேஷன், டிஷ்யூ பேப்பர் போன்ற பொருள்கள் தேவைப்படும் பட்சத்தில், அதற்கு உகந்ததுபோல் ஒரு ஹேண்ட் பேக் வைத்துக் கொள்வது அவசியம். அதுவும், உங்களின் ஆடைக்குத் தகுந்தாற்போல் ஹேண்ட் பேக் மற்றும் மணிபர்ஸை தேர்வு செய்யவேண்டும். பட்டுப் புடவை அணியும்போது, அதற்கேற்ப தங்க ஜரி பதித்த சுருக்குப் பை போன்ற பவுச்சுகள் உங்களின் டிரெடிஷனல் லுக்கை மேலும் மெருகேற்றும். அதே போல், ரிசப்ஷனுக்குக் கிளட்ச், சாடில் பேக் போன்ற டிசைனர் பைகளைத் தேர்வு செய்யலாம்.
நீங்கள் நினைத்தது போலவே உங்களின் திருமணத்திற்கான புடவைகள் மற்றும் அவற்றுக்கேற்ற ஆக்ஸசரிஸ் கிடைத்து விட்டாலே, பாதி கவலை தீர்ந்தது…! மூகூர்த்தம் மற்றும் ரிசப்ஷனில் எளிதில் உங்களின் ஒப்பனை முடிந்து விடும்.
வேண்டியவர்கள், நேச்சுரல்ஸ் போன்ற பியூட்டி பார்லர்களில் இருக்கும் அழகியல் நிபுணர்களை அணுகி, தனிப்பட்ட முறையில் உங்களுக்கு எந்தெந்த வகையான நகைகள் பொருந்தும், உங்களின் ஆடைக்கேற்ற ஆக்ஸசரீஸை எப்படித் தேர்வு செய்யலாம் என்பதை பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
from Latest news

0 கருத்துகள்