உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் அஹமதாபாத்தில் இன்று மோதவிருக்கின்றன. இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பிராட் இந்தியாதான் 95% உலகக்கோப்பையை வெல்லும் என கணித்திருக்கிறார்.
'Daily Mail' நாளிதழில் அவர் எழுதியிருக்கும் கட்டுரையில் இப்படி கூறியிருக்கிறார்.
அவர் எழுதியிருப்பவை, "இந்தியச் சூழலில் இந்திய அணி ரொம்பவே வலுமிக்க அணி. அவர்களின் லைன் அப்பை பாருங்கள். டாப் 6 இல் இருக்கும் எந்த வீரராலும் மேட்ச் வின்னிங் சதத்தை அடித்துக் கொடுக்க முடியும். பௌலர்கள் 5 பேராலும் எப்போது வேண்டுமானாலும் 5 விக்கெட் ஹால் எடுக்க முடியும். இந்த உலகக்கோப்பையில் இப்படி ஒரு லைன் அப்பை கொண்டிருக்கும் ஒரே அணி இந்தியா மட்டும்தான். இந்தியா உலகக்கோப்பையை வெல்லப்போவது கால்பந்தில் பிரேசில் வெல்வதைப் போல. தடகளத்தில் உசேன்போல்ட் வெல்வதைப் போல சிறந்தது.
2011 இல் இந்திய அணி உலகக்கோப்பையை வென்ற போது அது ஒரு தலைமுறைக்கே பெரும் ஊக்கமாக இருந்தது. அதேமாதிரி இந்த முறையும் நிகழ வேண்டும். உசேன் போல்ட் தடகளத்தில் வெல்ல வேண்டும் என அந்த விளையாட்டை சுற்றி முதலீடு செய்திருந்த அத்தனை பேரும் விரும்பினார்கள். அப்படித்தான் இந்த முறை இந்தியாவும் வெல்ல வேண்டுமென விரும்புகிறார்கள். விராட் கோலி 50 சதங்களை அடித்து வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்.
இரண்டு உலகக்கோப்பைகளை அதுவும் சொந்தமண்ணில் வென்ற வீரர் எனும் பாராட்டுக்கு அவர் முழுமையாக தகுதியுடையவர்தான். இந்தியாவை ஒரு 220 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால் மட்டுமே ஆஸ்திரேலிய அணிக்கு வெல்லும் வாய்ப்பிருக்கிறது.' என கூறியிருக்கிறார்.
ஸ்டூவர்ட் பிராடின் கணிப்பைப் பற்றிய உங்களின் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்.
from Latest news

0 கருத்துகள்