`சென்னை உட்பட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!' - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, கடந்த இரு தினங்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று (26-11-2023) தமிழகத்தின் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என, வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் சென்னை உட்பட எட்டு மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
from India News https://ift.tt/CjLgd29
via IFTTT

0 கருத்துகள்