சின்னத்திரை உலகின் லேட்டஸ்ட் நியூஸ் பைட்ஸ் இதோ!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `பாக்கியலட்சுமி'. இந்தத் தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்தத் தொடரில் கோபி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சதீஷ் அந்தத் தொடரில் இருந்து விலகப் போவதாக அறிவித்திருந்தார். அவரது விலகலுக்குப் பிறகு அவர் கதாபாத்திரத்திற்கு வேறொருவர் நிச்சயம் மேட்ச் ஆக மாட்டார் என சமூகவலைதள பக்கங்களில் கமென்ட்டுகளை குவித்தனர் ரசிகர்கள். பிறகு அவரும் இந்தத் தொடரில் தான் தொடர்ந்து நடிக்கப் போவதாக அறிவித்திருந்தார்.
தொடர்ந்து கதையோட்டம் குறித்த விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்தன. ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் `பாக்கியலட்சுமி' 1000 எபிசோட்களை கடந்திருக்கிறது. அதனை பாக்கியலட்சுமி டீம் மொத்தமும் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். அந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
வெள்ளித்திரையில் பரிச்சயமான முகம் நடிகை சுகன்யா. இவர் நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பான `ஆனந்தம்' தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தற்போது அவர் மீண்டும் சின்னத்திரையில் நடிக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகை சித்தாரா பல ஆண்டுகள் கழித்து சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `புது வசந்தம்' தொடரில் என்ட்ரி கொடுத்திருந்தார். விரைவிலேயே சுகன்யா நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.
பிக் பாஸ் சீசன் 7 தெலுங்கு எபிசோட் பரபரப்பாக முடிவடைந்துள்ளது. அந்த சீசனில் ரன்னர் அப் ஆகத் தேர்வான அமர்தீப் `வித்யா நம்பர் ஒன்' தொடரின் கதாநாயகி தேஜஸ்வினியின் கணவர். பிக் பாஸ் போட்டியாளராக அமர்தீப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.
ரன்னர் அப் ஆகி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் தனது மனைவியுடன் அவரது ரசிகர்களை சந்தித்திருக்கிறார் அமர்தீப். அந்த நிகழ்வில் தேஜஸ்வினியையும் அவரது ரசிகர்கள் கொண்டாடி இருக்கின்றனர். அந்த வீடியோக்கள் சமூகவலைதள பக்கங்களில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகின்றன.
from Vikatan Latest news

0 கருத்துகள்