Header Ads Widget

``நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணி சேருமா அதிமுக?" - விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள்!

இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதனால் நாடு முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக இருக்கும் தி.மு.க, இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க, கடந்த செப்டம்பர் மாதம் வரை பா.ஜ.க-வுடன் கூட்டணியிலிருந்தது. ஆனால், அப்போதே அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் சலசலப்பு இருந்துவந்தது.

விகடன் கருத்துக்கணிப்பு

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, அறிஞர் அண்ணா குறித்துப் பேசியது அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், எம்.பி-க்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், `அ.தி.மு.க., பா.ஜ.க-வின் கூட்டணியிலிருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்தும் விலகிக்கொள்கிறது' என்று ஏகமானதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து, இரு கட்சிகளும் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பிய போதெல்லாம், கூட்டணி கிடையாது என அ.தி.மு.க உறுதியாகவும், பா.ஜ.க நழுவும் விதமாகவுமே பதிலளித்து வந்தன. அதே நேரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "கூட்டணிக்காக பா.ஜ.க-வின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கிறது" எனக்  குறிப்பிட்டிருந்தார்.  அதற்குப் பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ``பா.ஜ.க-வுக்கான கதவை அ.தி.மு.க எப்போதோ மூடிவிட்டது. இனி அது திறக்காது" எனத் தெரிவித்திருந்தார்.

விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள்

இந்த நிலையில், நமது விகடன் இணையதளப்பக்கத்தில், ``நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி சேருமா அ.தி.மு.க?" எனக் கேள்வி எழுப்பி `` சேரும் - வாய்ப்பே இல்லை - தேர்தல் நெருக்கத்தில்தான் தெரியும்" என மூன்று விருப்பத் தேர்வுகளையும் கொடுத்திருந்தோம்.

இந்தக் கருத்துக்கணிப்பில்  கலந்துகொண்ட வாசகர்கள், ``நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி சேருமா அ.தி.மு.க" என்ற கேள்விக்கு, சேரும் என 34 சதவிகித வாசகர்களும், வாய்ப்பே இல்லை என 32 சதவிகித வாசகர்களும், தேர்தல் நேரத்தில்தான் தெரியும் என 34 சதவிகித வாசகர்களும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

தற்போது Vikatan.com பக்கத்தில், `கோட்சே, சாவர்க்கர் பெயர்களை குறிப்பிட்டு சபாநாயகர் அவையில் பேசியது?’ குறித்த கருத்துக்கணிப்பு நடைபெற்று வருகிறது. அதில் உங்கள் மேலான கருத்துகளை பதிவிடலாம்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from India News https://ift.tt/1KoOiCw
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்