தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள சிந்தலச்சேரியைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜா (55). இவரின் முதல் மனைவி உயிரிழந்ததால், செலின்மேரி என்பவரை இரண்டாம் தாரமாக திருமணம் செய்தார். இவர்களுக்கு ராஜ்குமார் என்ற மகன் உள்ளார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-02/54777e4f-0a59-424e-9fe2-b378555c83a9/IMG_20240222_WA0017.jpg)
இந்நிலையில் அந்தோணி ராஜா மதுபோதைக்கு அடிமையாகி தினமும் மது அருந்திவிட்டு, வீட்டிற்கு வந்து செலின்மேரியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். கடந்த 2019 ஜூன் மாதம் மதுபோதையில் வந்த அந்தோணி ராஜா, அவரது மனைவி செலின்மேரியை வழக்கம்போல் அடித்து துன்புறுத்தி உள்ளார். இதில் ஆத்திரமடைந்த செலின்மேரி, மகன் ராஜ்குமார் ஆகிய இருவரும் சேர்ந்து, அந்தோணி ராஜாவை கல் மற்றும் கட்டையால் தாக்கினர். பலத்த காயமடைந்த அந்தோணி ராஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தேவாரம் போலீஸார் செலின்மேரி, மகன் ராஜ்குமாரை கைதுசெய்தனர். இவ்வழக்கு விசாரணை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2020-01/33bc2778-00d2-4128-af05-409f35100d02/IMG_20191002_WA0044.jpg)
விசாரணை முடிந்த நிலையில் தாய் செலின்மேரி, மகன் ராஜ்குமார் ஆகிய இருவரும் கொலை குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டதால், இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
from Vikatan Latest news
0 கருத்துகள்