Header Ads Widget

`பாஜக ஆதரவில்தான் அதிமுக ஆட்சி நடைபெற்றது... இபிஎஸ் செய்தது உட்சபட்ச துரோகம்!' - ஓபிஎஸ் தாக்கு

மதுரை மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித் தமிழர் பட்டம் வழங்கியதுபோல், ஓ.பி.எஸ்-ஸுக்கு புரட்சிக் காவலர் பட்டத்தை வழங்கி, அவரை உற்சாகப்படுத்தியுள்ளனர் சிவகங்கை மாவட்ட ஆதரவாளர்கள்.

சிவகங்கை கூட்டன்

அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சிவகங்கை மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், சிவகங்கையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு `புரட்சிக் காவலர்' என்ற பட்டத்தை வழங்கி, வீரவாள், வளரி உள்ளிட்டவைகளை ஆதரவாளர்கள் பரிசாக வழங்கினார்கள்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், "ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை சில விதிகளின்படி அமைத்துக்கொள்ளலாம் என ஜெயலலிதா சொல்லியிருக்கிறார்.

ஓபிஎஸ்

அ.தி.மு.க கொடி, சின்னத்தை நான் பயன்படுத்தக் கூடாது என்றுதான் தீர்ப்பு உள்ளது. தொண்டர்கள் பயன்படுத்த தடை ஏதும் இல்லை.

எந்த தேர்தல் வந்தாலும் எங்களது அணி இரட்டை இலை சின்னத்தில்தான் நிற்க்கும். நான்கரை ஆண்டுக்காலம் பல தவறுகள் செய்தாலும், பா.ஜ.க-வின் ஆதரவில்தான் அ.தி.மு.க ஆட்சி நடைபெற்றது. பா.ஜ.க கூட்டணி முறிவு, எடப்பாடி பழனிசாமியின் உச்சபட்ச துரோகம் .

அ.ம.மு.க பிரிந்து போட்டியிட்டதால் சட்டமன்றத்தில் அ.தி.மு.க தோல்வியைத் தழுவியது. ஆனாலும், எடப்பாடி பழனிசாமி திருந்தவில்லை. தற்போது மேலும் பல பிரிவுகள் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகி கட்சியை ஐந்தாக உடைத்திருக்கிறார். ஆதலால் தொண்டர்களை இணைக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். அதில் வெற்றியும் பெறுவோம். எடப்பாடி இல்லாத அ.தி.மு.க மலரும்.

சிவகங்கை கூட்டத்தில் ஓபிஎஸ்

பொது சிவில் சட்டம் என்பது மனிதாபிமான முறையில், எந்த மக்களுக்கும் தீங்கு ஏற்படாத வகையில், மக்களுக்கு உரிய சட்டமாகவும், காலம் காலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பழக்க வழக்கங்களுக்கு மாசு ஏற்படாத வகையிலும் அமைய வேண்டும்" என்றார்.



from India News https://ift.tt/PKcUqwf
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்