ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள பொதுவக்குடியைச் சேர்ந்தவர் குருவம்மாள்(50). இவர் முனியாண்டி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் வேலை செய்து வந்ததுடன், அங்கேயே வசித்து வருகிறார். இவரின் மகள் வனிதா.(வனிதா 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் முதல்வராக ஆட்சி பொறுப்பேற்ற மகிழ்ச்சியில் தனது நாக்கை அறுத்து பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியவர்). இவரது கணவர் கார்த்திக். இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகனும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர். வனிதா தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது குழந்தைகளுடன் தாயார் குருவம்மாளுடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், குருவம்மாவுடன் வேலை செய்து வரும் ஆறுமுகசாமி (57) என்பவர், தனது மனைவி இறந்துவிட்ட நிலையில் வனிதாவை தனக்கு இரண்டாவது திருமணம் செய்து தருமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனை ஏற்காத குருவம்மாள், பாம்பூரை சேர்ந்த லேசர் நெல்சன் பீட்டர் என்பவருக்கு தனது மகள் வனிதாவை திருமணம் செய்து கொடுத்துள்ளார். நெல்சனும் வனிதாவும் கடந்த ஒரு மாதத்திற்கு முன் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டனர்.
இதனால் வனிதாவின் மகனையும், மகளையும் பாட்டி, குருவம்மாள் தான் வேலை செய்யும் தென்னந்தோப்பிலேயே தங்கவைத்து வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் வனிதாவை தனக்கு திருமணம் செய்து கொடுக்காத ஆத்திரத்தில் இருந்து வந்த ஆறுமுகம் புதன்கிழமை நள்ளிரவு குருவம்மாள் வீட்டுக்கு சென்று டீசலை ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்த தப்பி சென்றுவிட்டார். நள்ளிரவில் தோப்பில் இருந்து வந்த அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் தீயில் சிக்கிய குருவம்மாளையும் அவரது பேரன் மற்றும் பேத்தியை மீட்டு பரமக்குடி மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு படுகாயமடைந்த, குருவம்மாள் இறந்த நிலையில் மற்ற இருவரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு குருவம்மாளின் பேத்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பேரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்த எமனேஸ்வரம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்ததுடன் கொலையில் ஈடுபட்ட ஆறுமுகத்தை தேடி வந்தனர். இந்நிலையில் ஆறுமுகம் போலீஸாரின் விசாரணைக்கு பயந்து வியாழக்கிழமை அன்று விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த பரமக்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இரண்டாம் திருமணத்திற்கு தடையாக இருந்த பெண்ணையும், அவரது பேரன், பேத்தியையும் தீ வைத்து கொலை செய்ய துணிந்தத நபர் தனது உயிரையும் மாய்த்துக்கொண்ட சம்பவம் பரமக்குடி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
from Vikatan Latest news

0 கருத்துகள்