Header Ads Widget

'கோவையில் தீவிரவாதிகள் டார்கெட் செய்த ஏழு இடங்கள்' - அண்ணாமலை `பகீர்'

கோவை மாவட்டத்தில் 1998ம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான பாஷா கடந்த சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரின் உடலை ஊர்வலமாக எடுத்து செல்ல அனுமதி வழங்கியதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதைக் கண்டித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் கோவை விகேகே மேனன் சாலையில் கருப்பு பேரணியில் ஈடுபட முயற்சித்தனர். அப்போது அண்ணாமலை பேசும்போது,

அண்ணாமலை

“2022ம் ஆண்டு மனித வெடி குண்டாக மாறி கோவையை தாக்க திட்டமிட்டனர். மக்கள் அதிகம் கூடும் ஒரு பிரபல துணிக்கடையில் காரை நிறுத்தி சேதம் ஏற்படுத்தத் திட்டமிட்டனர். கோயிலை தாண்டும்போது  வெடித்து இறந்துவிட்டார். 2022 பிப்ரவரி மாதம் உமர் பரூக் என்பவன் தலைமையில் சத்தியமங்கலம் காட்டில் இதற்கான சதி திட்டத்தை தீட்டினர். அவர்களின் இரண்டாவது டார்கெட் போலீஸ் கமிஷனர் ஆபீஸ். ஏழு நாள் ஏழு இடங்களை தாக்குவதற்கு திட்டமிட்டனர்.

இது தீவிரவாத தாக்குதல் இல்லை என தமிழக காவல்துறை கூறுகிறது. நானும் அதே காக்கியை போட்டவன். காவல்துறை இனியாவது நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். 1998 கோவை குண்டு வெடிப்புக்காக பாஷா மைசூர் சென்று வெடி குண்டு வாங்கினார். 50 பேர் இறந்து, 250  பேர் காயமடைந்தனர். அந்த பாஷாவை ‘அப்பா’ என்று சீமான் கூறுகிறார். உயிரிழந்த யாருக்கும் அப்பா இல்லையா.

பாஜக பேரணி

ஓட்டு பிச்சை எப்படி எடுக்க வேண்டும் என உங்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். திருமாவளவன் பாஷாவை, ‘தியாகி.. வீரவணக்கம்’ என்று சொல்கிறார். இதைவிட மோசமாக ஓட்டு பிச்சை யாராலும் எடுக்க முடியாது. இதே பாஷா 2003 ம் ஆண்டு கோவை நீதிமன்றத்தில், ‘நரேந்திர மோடி கோவை வந்தால் கொன்றுவிடுவேன்.’ என கூறியதை மறக்க கூடாது.

பாஜக அமைதியை விரும்பும் கூட்டம். இது மாற்றத்துக்கான நேரம். அனைத்து மக்களும் பாதுகாப்பாக இருப்பதற்கு சிறுபான்மை மக்களும் தங்களிடம் ஓட்டு பிச்சை எடுக்க வருபவர்களை விரட்ட வேண்டும். கோவைக்கு என்ஐஏ அலுவலகம் அமைப்பதற்கு மத்திய அரசு பரிசீலனையில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாஜகவினர் மீது ஒடுக்குமுறை செலுத்துகிறார்கள்.

அண்ணாமலை

இந்த வீரத்தை சத்தியமங்கலத்தில் சதி திட்டம் போட்ட தீவிரவாதிகள் மீது ஏன் காட்டவில்லை. கோவையில் இந்தமுறை வானதி அக்காவுடன் இணைந்து ஆறு எம்எல்ஏ-க்களையாவது சட்டசபைக்கு அனுப்ப வேண்டும்.” என்றார். இதையடுத்து பேரணியில் ஈடுபட முயன்ற அண்ணாமலை உள்ளிட்ட பாஜக-வினரை கைது செய்து கணபதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்தனர்.



from India News https://ift.tt/VH86NWh
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்