Header Ads Widget

சட்டவிரோத குடியேற்ற விவகாரம்: "மோடி சரியான நடவடிக்கையை மேற்கொள்வார்..." - ட்ரம்ப்

அமெரிக்க அதிபராக கடந்த வாரம் டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். பதவியேற்ற உடன் அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை கைது செய்து அவர்களை நாடு கடத்த ட்ரம்ப் உத்தரவிட்டார். இதையடுத்து, ஆயிரக்கணக்கான சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் சொந்த நாடுகளுக்கு நாடுகடத்தப்பட்டு வருகின்றனர். அதேவேளை, அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள இந்தியர்களை ஏற்றுக்கொள்ள இந்தியா தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ட்ரம்ப், மோடி

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொலைபேசி மூலம் இந்திய பிரதமர் மோடியிடம் உரையாடினார். இந்த உரையாடலின்போது அமெரிக்காவில் வசித்து வரும் சட்டவிரோத இந்திய குடியேறிகளை திரும்பப் பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மோடியுடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறுகையில், "சட்டவிரோத குடியேறிகள் விவகாரத்தில் மோடி சரியான நவடிக்கையை மேற்கொள்வார்.

மோடி, டிரம்ப்

இது தொடர்பாக இந்தியாவிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்தியப் பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அப்போது வெள்ளை மாளிகையில் மோடியை நான் சந்திக்க உள்ளேன்" என்றார்.



from India News https://ift.tt/obk83p9
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்