Header Ads Widget

Health: வெளிநாட்டுப் பழங்கள் நமக்கு நல்லதா?

வெளிநாட்டுப்பழங்கள் அதிகமாக கிடைக்க ஆரம்பித்துவிட்டன. குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் விரும்பி சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். வெளிநாட்டுப் பழங்கள் நமக்கு நல்லதா? உணவு ஆலோசகர் ஷைனி சந்திரனிடம் பேசினோம்.

வெளிநாட்டுப் பழங்கள் நமக்கு நல்லதா?

''வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் பழங்கள் எந்த வெப்பநிலையில் குளிர்விக்கப்படுகிறது; எவ்வளவு நாட்கள் ஸ்டோரேஜ் செய்திருப்பார்கள் போன்ற விவரங்கள் எதுவும் நமக்குத் தெரியாது. பதப்படுத்தப்பட்ட பிறகு குறைந்தது 45 நாள்களுக்குப் பிறகுதான் இந்தப் பழங்கள் மார்கெட்டுக்கு வந்து சேரும். இப்படி வருவதால் அவற்றில் இயல்பாக இருக்கும் சத்துகள் குறைய வாய்ப்புள்ளது. பழங்கள் பறிக்கப்பட்டு இரண்டு நாள்களுக்குள் சாப்பிடுவது நல்லது. அப்போதுதான் அதில் உள்ள சத்துகள் நமக்கு முழுமையாக கிடைக்கும். வெளிநாட்டுப் பழங்களின் மீது தடவப்பட்டு இருக்கும் வேக்ஸ் கத்தியை வைத்துச் சுரண்டினால்தான் போகும். அப்படியே சாப்பிடுவது உடல்நலத்துக்கு ஆரோக்கியம் இல்லை. பார்ப்பதற்கு 'பளிச்’சென இருப்பதால், 'வெளிநாட்டுப் பழம் எவ்வளவு ஃபிரஷ்ஷா இருக்கு.,.’ என்ற நினைப்பில் பலர் வாங்குகின்றனர். இந்தப் பழங்களில் பூச்சியோ புழுவோ பார்க்க முடியாது.

நம் ஊர் பழங்களில் பூச்சி, புழு இருப்பது இயல்பு. பறவைகளோ, பூச்சிகளோ கடித்த பழங்கள் என்றால் அதை நம்பி தைரியமாக வாங்கலாம். காலி ஃபிளவரில் புழு இருப்பதைப் பார்த்து முகம் சுளிப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். உண்மையில் அதுதான் பூச்சிக்கொல்லி, ரசாயனம் ஏதும் இல்லாத நல்ல காலிஃபிளவர்.

Cauliflower

நல்ல உணவுப் பொருள்கள் எதுவாக இருந்தாலுமே அது இரண்டு நாள்களில் அழுகிவிடும். அண்மையில் எனக்குத் தெரிந்தவர் ஒருவர் வெளிநாட்டு ஆப்பிளை வாங்கி காரில் வைத்திருந்தார். அதை அவர் 12 நாள்களாக எடுக்க மறந்துவிட்டார். அதன் பிறகு எடுத்துப் பார்த்தபோதும் அந்த ஆப்பிள் கெட்டுப்போகாமல் அப்படியே புத்தம்புதியதாக இருந்தது. அப்படியானால் அந்த ஆப்பிள் கெட்டுப்போகாமல் இருக்க எந்த அளவுக்கு அதில் ரசாயனம் சேர்த்திருக்க வேண்டும்? நினைத்தாலே பகீரென இருந்தது.

இயற்கையில் பிரஷ்ஷாக நம் ஊரில் எவ்வளவோ பழங்கள் சீசனுக்குத் தகுந்தாற்போல கிடைக்கிறன. அந்தப் பழங்களை வாங்கிப் பயன்படுத்துவது உடலுக்கு நல்லது. கொய்யாப் பழம், சீத்தாபழத்தில் இல்லாத சத்துக்களா வெளிநாட்டு பழங்களில் இருக்கின்றன? கிராமத்துப் பக்கம் சந்தைகளிலும், தள்ளு வண்டிகளிலும் பழங்களை பேரம் பேசி வாங்கிய காலமெல்லாம் போய், நாகரிகத்தின் உச்சத்தில் நாம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பழங்களை வாங்குவதை கௌரவமாக நினைக்கிறோம். அது உடல்நலத்துக்கு நல்லதில்லை என்பதை எப்போது உணரப் போகிறோம்'' என வேதனையோடு முடிக்கிறார் ஷைனி சந்திரன்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs



from Vikatan Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்