Header Ads Widget

L2 Empuraan: ``ரஜினி சார் படத்தை இயக்க வேண்டியது; ஆனால்...'' - ப்ரித்விராஜ் ஓப்பன் டாக்

மோகன் லால் நடித்துள்ள `எல்2; எம்புரான்' படம் மார்ச் மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

ப்ரித்விராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது. முதல் பாகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து இந்த இரண்டாம் பாகம் தயாராகியிருக்கிறது. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று கொச்சியில் நடைபெற்று வருகிறது. மலையாள சினிமாவின் இருமுகங்களான மம்முட்டியும் மோகன் லாலும் மேடையில் ஒன்றாகப் பேசிய மொமன்ட் இந்த விழாவின் ஒரு முக்கியமான ஹைலைட்...

இந்த விழாவில் பேசிய நடிகர் மற்றும் இயக்குநர் ப்ரித்விராஜ், `` லைகா புரோடக்ஷன்ஸின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் என்னை ரஜினி சாரோடு ஒரு படம் இயக்கக் கேட்டிருந்தார். இது புது இயக்குநருக்கு மிகப்பெரிய வாய்ப்பு. ஆனால், அந்த நேரத்தில் பகுதி நேர இயக்குநராக அந்தப் பொறுப்புகளுக்கு நான் தகுதியாக இல்லை. ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் கதையைத் தயார் செய்து அப்படத்தை எடுத்துமுடித்தாக வேண்டும். அது சாத்தியமில்லாத விஷயம். ஆதலால் அந்தப் படம் நடக்கவில்லை. சுபாஸ்கரன் சார் ஒரு நாள் அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள் எனக் கேட்டார். லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் படத்தை இயக்கிவிருப்பதாகச் சொன்னேன்.

Prithviraj - L2 Empuraan teaser launch

`உங்களுடைய கனவுப் படத்தில் நான் எப்படி ஒரு அங்கமாக இருப்பது' எனக் கேட்டார். இந்தப் பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. அப்படிதான் லைகா நிறுவனம் இப்படத்திற்குள் வந்தது. மலையாள சினிமாவில் லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுவென்பது கூடுதல் சிறப்பு. சமீபத்தில் நான் பார்த்த சிறந்த டிரைலர் என்றால் அது `விடாமுயற்சி' படத்தின் டிரைலர்தான். அந்தப் படமும் வெற்றி பெற வாழ்த்துகள். " எனப் பேசினார்.

VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/SeenuRamasamyKavithaigal



from Vikatan Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்