Header Ads Widget

Rinku Singh - Priya Saroj: நிச்சயதார்த்த விழாவில் நடனமாடிய எம்.பி; வெட்கத்தில் நின்ற ரின்கு!

இந்திய கிரிக்கெட் வீரர் ரின்கு சிங் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியா சரோஜ் திருமண நிச்சயதார்த்தம் லக்னோவில் இன்று நடைபெற்றது.

இதில் சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் முன்னாள் உத்தரபிரதேச முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், அவரது மனைவியும் நாடாளுமன்ற உறுப்பினருமான டிம்பிள் யாதவ் மற்றும் அரசியல் தலைவர்கள் ராஜீவ் சுக்லா, ஜெயா பச்சன், ஷிவ்பால் யாதவ், ராம்கோபால் யாதவ், கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

Rinku singh wedding

இணையத்தில் வைரலாகும் நிச்சயதார்த்த வீடியோவில், மணமகள் பிரியா 'Gallan Goodiyan' என்ற பாலிவுட் பாடலுக்கு நடமாடுவதையும் ரின்கு சிங் வெட்கப்பட்டுக்கொண்டு நிற்பதையும் பார்க்க முடிகிறது.

பிரியா சரோஜின் அப்பா துஃபானி சரோஜ் கேராகட் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். பிரியா சரோஜ் 2024-ம் ஆண்டு தேர்தலில் மச்லிஷஹர் தொகுதியில் வெற்றிபெற்று முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகியிருக்கிறார்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டமும் பெற்ற பிரியா, 2022-ம் ஆண்டு அவரது தந்தையின் வெற்றிக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது உத்தரபிரதேச அரசியலில் கவனிக்கப்பட்டார்.

இவர்களது திருமணம் உத்தரபிரதேசம் முழுவதும் பேசப்படும் நிகழ்வாக மாறியிருக்கிறது.



from Vikatan Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்