Header Ads Widget

Andropause: ஆண்ட்ரோபாஸ்; அறிகுறிகள், வாழ்வியல் மாற்றங்கள், தீர்வுகள் என்னென்ன?

''ஆண்களுக்கு ஏற்படக்கூடிய மெனோபாஸை `ஆண்ட்ரோபாஸ்’ என்பார்கள். `ஆண்ட்ரோபாஸ்’ பற்றி அறிந்துகொள்வதற்குமுன் `டெஸ்டோஸ்டிரோன்’ (Testosterone) ஹார்மோன் பற்றித் தெரிந்துகொள்வது அவசியமாகும்.

ஆண்களின் உடலில் சுரக்கக்கூடிய, ஆண்களுக்கான முக்கியப் பாலியல் ஹார்மோனான இது, விந்தகத்தில் சுரக்கிறது. ஆண்களின் உடல் மற்றும் முகத்தில் முளைக்கும் முடி, எலும்புகளின் அடர்த்தி, தசைப் பருமன், வலிமை, பாலியல் நாட்டம், விந்தணுக்களின் உற்பத்தி ஆகியவற்றுக்கு இந்த ஹார்மோன் சுரப்பு முக்கியமானது. ஒற்றை வரியில் சொல்வதென்றால் ஆண்கள் ஆண் தன்மையோடு இருப்பதற்குக் காரணமே `டெஸ்டோஸ்டிரோன்’ ஹார்மோன்தான்.

Andropause
Andropause

பொதுவாக, 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு ‘டெஸ்டோஸ்டிரோன்’ அளவு குறைவாக இருக்கும். இந்த நிலையே ‘ஆண்ட்ரோபாஸ்’ (Andropause) எனப்படுகிறது. அதேநேரத்தில் `ஆண்ட்ரோபாஸ்’ காலகட்டம் அவரவர் உடல்நிலையைப் பொறுத்து 50 வயதிலோ, அல்லது அதன் பிறகோகூட அமையலாம்'' என்கிற நாளமில்லாச் சுரப்பி மருத்துவர் ஜெயஸ்ரீ கோபால், `ஆண்ட்ரோபாஸ்’ அறிகுறிகள், தீர்வுகள் பற்றி விளக்கினார்.

* உடல் சோர்வு

* எலும்புகள் தொடர்பான பிரச்னை (ஆஸ்டியோபோரோசிஸ்)

* மனஅழுத்தம்

* உடல் எடை அதிகரித்தல்

* தசைகள் வலுவிழத்தல்

* தூக்கமின்மை (இன்சோம்னியா)

* செக்ஸ் வாழ்க்கையில் நாட்டமின்மை

Andropause
Andropause

* ஆரோக்கியமான உணவுகளை உண்பது

* கால்சியம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது

* எளிமையான உடற்பயிற்சிகளைச் செய்வது

* தினமும் அரைமணி நேரமாவது நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல்

* உடல்பருமன், சர்க்கரைநோய், மனஅழுத்தம் தவிர்த்தல்

* 7 மணி நேரம் தூக்கம் அவசியம்

*சரியான நேரத்துக்கு உணவு உண்ணுதல்

* போதிய அளவு ஓய்வெடுத்தல்

* தினமும் 20 நிமிடங்கள் தியானம் செய்வது

`டெஸ்டோஸ்டிரோன்’ ஹார்மோன் சிகிச்சை தேவைப்படலாம். ஆனால், அதில் சில பக்க விளைவுகளும் உள்ளன. தவிர்க்க முடியாதபட்சத்தில், மாத்திரைகள், காப்ஸ்யூல்கள், ஜெல் மற்றும் ஊசி வடிவங்களில் கிடைப்பவற்றை மருத்துவர் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ளலாம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR



from Vikatan Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்