Header Ads Widget

Parking: "நம்ப முடியாத அங்கீகாரம்" - இயக்குநர் ராம்குமார் நெகிழ்ச்சி

71வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த தமிழ் திரைப்படமாக ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர் நடித்த பார்கிங் தேர்வு செய்யப்பட்டது.

அத்துடன் இந்த படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் சிறந்த திரைக்கதைக்கான விருதைப் பெறுகிறார். நடிகர் எம்.எஸ்.பாஸ்கரன் சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெறுகிறார்.

parking
parking

3 விருதுகள் வென்றுள்ளதால் பார்கிங் குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். அதை வெளிப்படுத்தும் விதமாக படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அனைவருக்கும் நன்றி

அதில், "பார்கிங் (parking) திரைப்படம் தேசிய விருதுகள் வரை சென்றிருப்பது மகிழ்ச்சி. இதற்கு ஆதரவாக இருந்த மக்களுக்கும் ஊடகத்தினருக்கும் நன்றி.

பார்கிங் வெளியானபோது வெள்ளம் வந்தது. அந்த சூழலிலும் திரையரங்கில் பார்த்து வாய்வழியாக படத்தைப் பற்றி பேசி, ஓடிடியில் கிடைத்த வெற்றிக்குப் பிறகு தேசிய விருது என்ற அங்கீகாரம் பெற்றிருப்பதற்காக அனைவருக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

இந்த படத்தில் நடித்த கலைஞர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் கொடுத்த ஆதரவுதான் இந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறது. அவர்களுக்கு நன்றி." எனப் பேசியிருந்தார்.

மேலும் ஒரு சிறிய ஐடியாவை படமாக மாற்ற முடியும் என நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்கள் ஷோல்ஜர்ஸ் ஃபேக்டரி, பேஸன் ஸ்டூடியோஸுக்கு நன்றி கூறினார்.

மேலும் இந்த நம்பமுடியாத அங்கீகாரத்தை ஒரு பொறுப்புணர்வாக எடுத்துக்கொண்டு அடுத்தடுத்த படங்களுக்கும் கடத்துவேன் எனக் கூறியிருந்தார் ராம்குமார்.

இவர் இப்போது சிம்புவின் 49வது திரைப்படத்தை இயக்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



from Vikatan Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்