Header Ads Widget

பாமக: "மாம்பழம் சின்னத்தை முடக்காமல் இருக்க, தேவையான ஆவணங்கள் எங்களிடம் இருக்கின்றன" - திலகபாமா

'பா.ம.க கட்சியையும், சின்னத்தையும் முடக்க வேண்டும் என நினைத்து மருத்துவர் ராமதாஸுடன் உள்ள சிலர் டெல்லிக்குச் சென்றிருக்கிறார்கள். அவர்களுக்குப் பதிலடியாக இந்தத் தீர்ப்பு வந்துள்ளது' என்று விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மாநில பொருளாளர் திலகபாமா பேசியிருக்கிறார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்த திலகபாமா கூறுகையில், "ஆவணங்களின் அடிப்படையில் பா.ம.க-வின் தலைவர் அன்புமணிதான் எனத் தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. இது பா.ம.க சொந்தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

பா.ம.க கட்சியையும், சின்னத்தை முடக்க வேண்டும் என நினைத்து மருத்துவர் ராமதாஸுடன் உள்ள சிலர் டெல்லிக்குச் சென்றிருக்கிறார்கள் அவர்களுக்குப் பதிலடியாக இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்த பின்னரும் தமிழக அரசின் அறநிலையத்துறை சார்பில் மேல்முறையீடு செய்துள்ளது மோசமான செயல் அறநிலையத்துறையை யார் இன்று முடுக்கி விட்டார்கள்.

பாமக மாநில பொருளாளர் திலகபாமா
திலகபாமா

இதற்கு தமிழக மக்கள் சார்பில் வருத்தம் தெரிவிப்பதுடன் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். பா.ம.க-வின் நிறுவனராக மருத்துவர் ராமதாஸை ஏற்றுக் கொள்கிறோம். 40 ஆண்டுகளாக கட்சியை ஒரு நபராக வளர்க்கவில்லை, பாட்டாளி சொந்தங்கள் இணைந்து வளர்த்தெடுத்திருக்கிறார்கள்.

கட்சியை அடுத்த தலைமுறைக்குப் பத்திரப்படுத்தி கொடுப்பதற்கும், தமிழகத்தின் தலைமுறையைக் காப்பதற்கும் கடுமையான முயற்சிகளை எடுக்க வேண்டிய கட்டத்தில் அன்புமணி இருக்கிறார். பாசப் போராட்டத்தையும் தாண்டி, தமிழக மக்களுக்காக உழைப்பதற்கு அவர் முறையான வழியில் சென்று கொண்டிருக்கிறார்.

அன்புமணி ராமதாஸ் வெறும் அதிகாரத்தைக் கைப்பற்ற போராடவில்லை, மக்களுடன் அவர் இருப்பதால் அதிகாரம் அவர் கையில் வந்து சேர்கிறது. சின்னத்தை முடக்காமல் இருப்பதற்கு தேவையான ஆவணங்கள் எங்களிடம் இருக்கிறது. சதிகாரர்கள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.



from India News https://ift.tt/EyTpJ8Y
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்