Header Ads Widget

கோவை: `திமுக அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது!'- பாஜக செயல் தலைவர் நிதின் நபின் சபதம்

பாஜக அகில இந்திய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிதின் நபின் 2 நாள்கள் பயணமாக கோவை வந்துள்ளார். நேற்று மாலை பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் மாநில பாஜகவின் மூத்த நிர்வாகிகள், கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதில் பேசிய நிதின் நபின்,

நிதின் நபின்

“இந்தியா வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் முன்னேறிய நகரமாக கோவை உள்ளது. 

கோவைக்கு வந்தே பாரத் ரயிலை மோடி வழங்கியுள்ளார். ஜவுளித்துறை, சிறு குறு நிறுவனங்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இளைஞர்களின் முன்னேற்றம், உள்நாட்டு கட்டமைப்பு போன்றவற்றில் அதிக முதலீடு செய்துள்ளோம். கொங்கு மண்டலம் முன்னேற்றத்திற்கான பகுதி. 

கோவை
கோவை

தேசிய ஜனநாயக கூட்டணி மக்கள் நலனுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும். பிரதமர் மோடி ஊழல் இல்லாத ஆட்சியை வழங்கி வருகிறார், ஆனால் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் அப்படி இல்லை. ஊழல், லஞ்சம் என்றால் அது திமுக ஆட்சி தான்.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. கல்லூரி மாணவிகள் மீது பாலியல் வன்முறை நடைபெறுகிறது. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். அனைவருக்கும் பாதுகாப்பான அரசு வர வேண்டும். தமிழ்நாட்டில் ஒரு சில அமைச்சர்கள் கொச்சையாக பேசி வருகிறார்கள்.

பாஜக சபதம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீபத்தை ஏற்ற விடாமல் மாநில அரசு செயல்பட்டுள்ளது. திமுக அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. மக்கள் மீதும், மண் மீதும் அக்கறை கொண்ட அரசாங்கம் வர வேண்டும்” என்றார். பிறகு பாஜகவின் வெற்றிக்காக சபதம் எடுத்தனர்.



from India News https://ift.tt/SNUwOrA
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்