``கோவை கார் வெடி விபத்தில் உயிரிழந்தவர் வீட்டில் வெடி பொருள்கள்” - டிஜிபி சைலேந்திர பாபுகோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் ஜமோசா முபீன் என்பவர் உயிரிழந்தார். இது குறித்து காவல்துறை நடத்திய விசாரணையில் ஜமோசா வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க தேவையான பொருள்கள் கிடைத்தது. மேலும் வெடிகுண்டு தயாரிக்க தேவையான பொருட்களும் இறந்தவர் வீட்டில் கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை `கோவையில் நடந்தது தீவிரவாத தாக்குதலே; இனியும் தமிழக அரசு மூடிமறைக்க முடியாது’ எனத் தெரிவித்திருக்கிறார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-10/9ddd751b-576b-41c3-a73c-fda8bbf9fd13/WhatsApp_Image_2022_10_23_at_10_55_39.jpeg)
மேலும் அண்ணாமலை, ``கோவை நகரில் உக்கடத்தில் கார் ஒன்றில் சிலிண்டர் வெடித்ததாக செய்தி அனைவரும் பார்த்திருப்பீர்கள். இது தொடர்பாக தமிழக காவைதுறை டிஜிபி சைலேந்திரபாபு அவர்களுடன் உயர் அதிகாரிகள் கார் சிலிண்டர் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்து தங்களது முதல் கட்ட விசாரணைடை தொடங்கினார்கள். இது ஒரு விபத்து. குண்டு வெடிப்பு என்று எண்ண வேண்டாம் என அதிகாரிகள் இதுவரை சொல்லவில்லை. ஆனால் கோவை நகரில் அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். காரில் ஏற்றி வரப்பட்ட சிலிண்டர் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பதஒ விசாரிப்பதற்கு 6 தனிப்படையின் அவசியம் என்ன?
திறனற்ற திமுக ஆட்சியில், பதவியேற்ற நாள் முதல் மக்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவிவருகிறது. கடந்த 15 மாதங்களில் பட்டப் பகலில் குண்டு வீச்சு சம்பவங்கள் நடு ரோட்டில் படுகொலைகள் போன்றவற்றை நாம் பலமுறை பார்த்ததால் கோவையில் நடந்ததை சிலிண்டர் விபத்தாக கருதி எளிதில் கடந்து செல்ல முடியவில்லை.
தமிழக பாஜக தலைமை அலுவலகத்தின் மீது கூட பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தான் திமுக ஆட்சியில் சட்டசபையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் ஒரு கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு கிடைத்த பாதுகாப்பு.
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-09/ad6a1457-8960-4803-a377-005c07c3c625/annamalai.jpg)
கடந்த ஒரு மாதத்தில் பி.எஃப்.ஐ என்ற அமைப்பை மத்திய அரசு தடை செய்த பின் தமிழக பாஜக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகம், கடை, வீடுகளைக் குறி வைத்து 19 இடங்களில் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தன.
திமுக ஆட்சியில் குண்டு வெடிப்புகள் புதிது அல்ல. 1998 ஆம் ஆண்டு கடந்த திமுக ஆட்சியில் கோவையில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்து 58 பேர் பரிதாபமாக உயிரிழந்ததை கோவை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். இன்று மீண்டும் அதே பதற்றத்தில் பண்டிகை நாளென்றும் வீடுகளில் முடங்கி கிடக்கிறார்கள் நம் மக்கள்.
உயிருக்கு உத்தரவாதம் இல்லாத ஒரு சூழலில் வாழ்ந்து வரும் நம்மை காக்க இந்த திறனற்ற திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால்தான் தொடர்ச்சியாக சமூக விரோதிகள் மற்றும் தீவிரவாத சிந்தனை கொண்டவர்கள் சிறையில் இல்லாமல் வீதியில் நடமாடி வருகிறார்கள். இன்றைக்கு நடந்த சம்பவம் மக்கள் நடமாடும் நேரத்தில் நடந்திருந்தால் எப்பேற்பட்ட உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். இறைவன் அருளால் மட்டுமே மக்கள் இன்று பிழைத்துக் கொண்டனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-10/af450f7a-ea41-424b-b9d0-be6f03afd19d/WhatsApp_Image_2022_10_23_at_14_41_34.jpeg)
கார் சிலிண்டர் வெடிப்பில்பு உயிரிழந்தவரின் பெயரை காவல்துறை வெளியிட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு முகமையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஜமோசா முபீன் என்பவராகும் காவல்துறை வட்டாரங்களில் கார் வந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த பின் வேகத்தடையினால் கார் கட்டுப்பாட்ட இழந்து குண்டுவெடிப்பு ஏற்படுத்துவதற்கு எடுத்துச் செல்லப்பட்ட சிலிண்டர் வெடித்ததாகவும் சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த ஆதாரங்கள் குண்டு வெடிப்பையே சுட்டிக்காட்டுவதாக பேசப்படுகிறது. இது ஒரு திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் என்பதை இந்த திறனற்ற திமுக அரசு எப்போது ஒப்புக்கொள்ளும்?
கோவையில் தீவிரவாதிகளால் திட்டமிடப்பட்ட ஒரு குண்டு வெடிப்பு சம்பவம். இதை சொல்வதற்கு தமிழகம் முதல்வர் தயங்குவது ஏன்? தேச விரோத தீவிரவாத கும்பல் இப்படிப்பட்ட சதித்திட்டத்தை தீட்டி பண்டிகை நாளன்று ஆள் நடமாட்டம் உள்ள இடத்தில் குண்டு வெடிக்க வைத்து உயிரை கொல்லும் வரை உளவுத்துறை உறங்கிக் கொண்டிருந்ததா? குறைந்தபட்ச பாதுகாப்பு கூட வழங்க முடியவில்லை எனில் தமிழக காவல்துறையால் மக்களுக்கு என்ன பயன்? உளவுத்துறை என்ற பிரிவு தமிழகத்தில் பெயரளவில் மட்டுமே உள்ளது. இது போன்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் உளவுத்துறையின் தோல்வியின் வெளிப்பாடு.
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-09/2328fdd0-efcd-4dbe-9379-7b6259d03f5d/WhatsApp_Image_2022_09_10_at_12_46_05_PM.jpeg)
முதல்வர் தன்னை சுய பரிசோதனைக்கு உள்ளாக்கி கொள்ள வேண்டும். தனது தலைமையிலான இந்த அரசின் திறனற்ற தன்மையால் மக்களுக்கு ஏற்படும் தொடர் அச்சுறுத்தலுக்கு பின்னரும் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனமாக இருப்பது ஏன்? திறனற்ற திமுக அரசு மக்களுக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை மக்களுக்கு அச்சுறுத்தலாக மாறிவிடாதீர்கள். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறை தயவு தாட்சனை இன்றி கைது செய்ய வேண்டும் என்பது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கையாகும்” என்றார்
from Latest News
0 கருத்துகள்