Header Ads Widget

கேன்டீன் தொடர்பான வாக்குவாதம்... சக ஊழியர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சிறை காவலர் - அதிர்ச்சி வீடியோ

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்ட சிறைச்சாலையின் பொறுப்பாளராக் இருப்பவர் முகேஷ் துபே. இவர் கேன்டீன் பொறுப்பாளராக இருந்து வருகிறார். அதே சிறைச்சாலையில் பணிபுரியும் சில காவலர்கள், முகேஷ் துபே-வால் அவர்களின் கேன்டீன் வியாபாரம் பாதித்ததாக புகார் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும், அவர் தனது கேன்டீன் உணவின் தரத்தை குறைத்துக் கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் மூன்று காவலர்கள் அவரை சுற்றி நின்றுக்கொண்டு முகேஷ் துபேவை தடி, கட்டை போன்ற பொருளால் தாக்குகின்றனர். அவர் தாக்கப்படும் காட்சி சிறைச்சாலைக்கு வெளியே கண்காணிக்கப் பயன்படும் சிசிடிவி காட்சியில் பதிவாகியிருக்கிறது. அதைத் தொடர்ந்து, அந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சம்பவம் குறித்து ஊடகங்களிடம் பேசிய உயர் காவல்துறை அதிகாரி ஒருவர், "பரேலி சிறைச்சாலையில் குற்றம்சாட்டப்பட்ட 5 காவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு, துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், விசாரணை நடைபெற்றுவருகிறது. முகேஷ் துபே சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" எனத் தெரிவித்திருக்கிறார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/E0HdC9e
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்