தமிழ்நாட்டின் தலைசிறந்த தங்க நகை பிராண்டான போத்தீஸ் ஸ்வர்ண மஹால் அதன் புதுமையான மற்றும் தனித்துவமான கலைநயப் படைப்பிற்காக, "பிரைடல் கோல்டு ஜுவல்லரி ஆஃப் தி இயர் 2023" விருதை இரண்டாவது வெற்றியாளராகப் பெற்று சாதனை படைத்துள்ளது.
“இந்திய நகைத்துறையின் ஆஸ்கார் விருதான" இந்த விருதை ஜெம் அண்டு ஜுவல்லரி கவுன்சில் ஆஃப் இந்தியா வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.
"ஜெம் அண்டு ஜுவல்லரி கவுன்சில் ஆஃப் இந்தியா" அமைப்பு இந்தியாவில் நகைத்துறையை ஊக்குவிக்கும் ஒரு பெருமை மிகுந்த அமைப்பாகும். இந்த அமைப்பின் உறுப்பினர்களாக இந்தியாவின் அனைத்து நகை வியாபாரிகளும் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நகைகளைத் தயாரிக்கும் அதன் உறுப்பினர்களுக்கு இந்த விருதினை வழங்குகிறது. இதற்காக ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான நகை உற்பத்தியாளர்கள் புதுமையான நகைகளைத் தயாரித்து விருதுக்காக போட்டியிடுகின்றனர்.

“இந்த தேசிய விருதுக்காக போட்டியிட்டு இரண்டு முறை விருதை வென்றதை எமது நிறுவனத்தின் மகத்தான மற்றும் கௌரவமான வெற்றியாக கருதுகிறோம். எமது இந்த மாபெரும் வெற்றிக்கு என்றென்றும் ஆதரவளித்து துணை நிற்கும் எமது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று போத்தீஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் திரு. ரமேஷ் போத்தி அவர்கள் தெரிவித்தார்கள்.
விருதை வென்ற எமது தங்க நகைகள் யுனெஸ்கோவின் ( UNESCO ) உலக பாரம்பரிய தள வரலாற்றில் இடம் பிடித்துள்ள, ஒடிசா மாநிலத்திலுள்ள 13வது நூற்றாண்டின் கொனார்க் சூரியக் கோயிலின் வடிவமைப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நகை, இந்து ஜோதிட நவகிரகங்களில் முதன்மையான சூரியக் கடவுளை கௌரவிப்பதாக அமைந்துள்ளது. வேத பாரம்பரிய முறைப்படி, 9 கோள்களில் சூரியக்கோள், பிற எட்டு கோள்களான சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு மற்றும் கேதுவின் இரண்டு முனைகள் ஆகியவற்றுக்கு அரசனாக திகழ்கிறது. நமது நாட்குறிப்பில் 7 நாட்களும் இந்த கோள்களின் அடிப்படையில்தான் அமைக்கப்பட்டுள்ளன.
சூரியன் கிழக்கில் எழுந்து ஏழு அற்புதமான குதிரைகள் பூட்டிய தேரில் வானத்தை கடந்து செல்வதை வடிவமைப்பில் கொண்டுவந்துள்ளோம். உள்ளத்தை உற்சாகமூட்டும் சூரியனின் நிறங்களான - ஊதா, இண்டிகோ (நீல ஊதா), பச்சை, நீலம், மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு ஆகிய நிறங்கள் நகையில் சேர்க்கப்பட்டுள்ளன.
சூரிய பகவானை சுமந்து செல்லும் 7 குதிரைகளின் பெயர்கள் காயத்திரி, பிரஹதி, உஷ்ணி, ஜகதி, த்ரிஷ்துபா, அனுஷ்துபி மற்றும் பங்க்தி ஆகும். இந்த ஏழு புனித குதிரைகளும் தெய்வீக தேரை வழிநடத்தி தேரோட்டி அருணாவிற்கு வழிகாட்டுகிறது. சூரியனின் இணையற்ற சக்தியின் அடையாளம், எதிர்மறைவானவற்றை கட்டுப்படுத்துகிறது, பிற எட்டு கோள்களும் அண்ட சராசரங்களையும் சமநிலையில் வைத்துள்ளன. இந்த கிரகங்கள் ஒவ்வொன்றும் அவற்றின் முக்கிய செயல்பாடுகளை செய்கின்றன. ஜோதிடம், மனித வாழ்க்கை, வெற்றி மற்றும் அனைத்து உலக செழிப்புகளின் மீது தமது செல்வாக்கை செலுத்துகின்றன. இந்த கோள்களின் தனித்துவமான ஆற்றல்களுடன் விதிகள் கட்டமைக்கப்படுகின்றன.
“மிகுந்த பயபக்தியுடன் வடிவமைக்கப்பட்ட நகையில், ஒன்பது ஜோதிடக் கோள்களின் ஆற்றல் கொண்ட புனிதமான ஒன்பது இரத்தினக் கற்களை ஒருங்கிணைத்து பழங்கால தங்கத்தில் நவரத்தினங்களாக பதித்து, ஒன்பது நவகிரக ஜோதிட சக்திகளை உயிரூட்டி இணையற்ற தனித்துவ படைப்பாக உருவாக்கியுள்ளோம். இந்த அரிய படைப்பை உருவாக்குவதற்கு நுணுக்கமான ஆய்வை நடத்தி அதன் அடிப்படையில் இந்நகை உருவாக்கப்பட்டுள்ளது” என்றார் போத்தீஸ் ஸ்வர்ண மஹாலின் நிர்வாக இயக்குநர் திரு. அஷோக் போத்தி அவர்கள்.
“பல மாதங்களாக அவரது அயராத உழைப்புக்கு, நமது தேசத்தின் மதிப்புமிக்க GJEPC, நகைகள் ஊக்குவிப்பு அமைப்பினால் தகுந்த வெகுமதி கிடைத்துள்ளது என்று நாங்கள் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார் திரு. ரமேஷ் போத்தி அவர்கள்.

from Latest news

0 கருத்துகள்