Header Ads Widget

Rohit Sharma: ``முதல் அணியாக இறுதிப்போட்டிக்கும் செல்வோம்!" - வெற்றி குறித்து நெகிழ்ந்த ரோஹித்

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இதில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று உலகக்கோப்பைத் தொடரில் முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறது.

போட்டிக்கு பிறகு அணியின் வெற்றி குறித்து ரோஹித் சர்மா மகிழ்வாக பேசியிருந்தார். “ சேப்பாக்கத்தில் உலகக்கோப்பைப் பயணத்தை தொடங்கிய போது அரையிறுதிக்கு தகுதிப்பெற வேண்டும் எண்பதத்தான் முதல் இலக்காக வைத்திருந்தோம். இப்போது அது நடந்துவிட்டதில் மகிழ்ச்சி. ஒவ்வொரு வீரரும் தனிப்பட்ட முறையில் பொறுப்பை உணர்ந்து ஆட வேண்டும் என விரும்பினேன். முடிந்திருக்கும் 7 போட்டிகளில் பல வீரர்கள் முன் நின்று சிறப்பாக ஆடி போட்டிகளை வென்று கொடுத்திருக்கின்றனர்.' என்றார்.

Indian team

நேற்றைய ஆட்டத்தில் கே.எல் ராகுலின் ஆலோசனைப்படி DRS முடிவை ரோஹித் சர்மா எடுத்திருந்தார். அது அணிக்கு சாதகமாக அமைந்திருந்தது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய அவர், 'DRS முடிவை எப்போதும் நான் எடுக்க மாட்டேன். பவுலர் மற்றும் விக்கெட் கீப்பர்களிடம் விட்டுவிடுவேன். என்று கூறியிருக்கிறார். இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் மிகவும் தெளிவாக விளையாடினார்.

அவரை நான் நீண்ட நாட்களாகவே பார்த்து வருகிறேன் அவர் இது போன்ற பெரிய இன்னிங்ஸை விளையாடக்கூடியவர்தான். அந்தவகையில் இந்தப் போட்டியில் அவருடைய திறனை நன்றாகவே வெளிக்காட்டியிருக்கிறார். அதேபோல் பந்துவீச்சில் சிராஜ் ஒரு திறமைமிக்க பவுலர்.

ரோஹித் சர்மா

அவர் தன்னுடைய பார்மில் இருந்தால் ஆட்டத்தில் அவர் மிகப்பெரிய வித்தியாசத்தை உருவாக்க கூடியவர். எங்கள் அணி இனிவரும் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கும் செல்வோம்.' என்று மகிழ்ச்சியாக தெரிவித்திருக்கிறார்.



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்