Header Ads Widget

திருப்பரங்குன்றம்: "சட்டப்போராட்டம் நடத்தியும் சடங்கை செய்ய முடியவில்லை" - பவன் கல்யாண் வருத்தம்!

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னை தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்காவும் இருக்கும் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை தீபம் விழாவில் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது.

கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம்
கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம்

ஆனால் மலையின் உச்சியில் இருக்கக் கூடிய தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பை நிறைவேற்ற மறுத்தது திமுக அரசு. இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றம் வரை விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் சர்ச்சை குறித்து ட்வீட் செய்துள்ள பவன் கல்யாண், "திருப்பரங்குன்றம் முருகனின் ஆறு படைவீடுகளில் முதன்மையானது. இந்து மரபுகள், சடங்குகளை கேலி செய்வது சில குழுக்களின் வழக்கமாகிவிட்டது. இந்துக்கள் தங்களது நம்பிக்கையை பின்பற்ற நீதிமன்றத்தை நாட வேண்டியிருப்பது வருத்தத்துக்குரிய நிலை.

தீர்க்கமான சட்டப் போராட்டத்திற்கு பிறகும் தீபமேற்றும் சடங்கை சொந்த நாட்டில் செய்ய முடியவில்லை. சாதி, பிராந்தியம், மொழியால் பிளவுபட்டுள்ளவரை இந்துக்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் இருக்கும். ஒரு புனித நாள் கொண்டாட்டத்தை வேறு நேரத்திற்கு மாற்ற முடியுமா?" என கேள்வி எழுப்பி உள்ளார்.



from Vikatan Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்